தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு மழலைப்பேறு தரும் ஆலயங்கள்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              தனுசு ராசியில் பிறந்த நீங்கள், குரு இல்லாமல் வித்தையைக் கற்றுக் கொண்ட ஏகலைவன் போல எதையும் எளிதில் கற்றுக் கொள்வீர்கள். வித்தியாசமாக யோசிப்பீர்கள். மற்றவர்கள் முடியவே முடியாது என்று கைவிட்ட விஷயங்களை அநாயாசமாக முடிப்பீர்கள். சவால்கள் உங்களுக்கு சர்க்கரைக் கட்டி. பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பு ஏனோ தானோ என்றிருக்கும் நீங்கள், அதன்பின் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

 உங்களுக்கு பூர்வ புண்யாதிபதியாக  குழந்தை பாக்கியத்தைத் தருபவராக  மேஷச் செவ்வாய் வருவதால் மண் மணம் மாறாமல் பிள்ளைகளை வளர்க்க விரும்புவீர்கள். நகரத்திற்கு இடம் பெயர்ந்தாலும் அவ்வப்போது குழந்தைகளோடு ஊர் விசேஷங்களில் கலந்துகொள்ளத் தவற மாட்டீர்கள். பீட்ஸா, பர்கர் வாங்கித் தந்தாலும், அவ்வப்போது கம்மங்கூழ், கேப்பையையும் சாப்பிட வைப்பீர்கள்.  

‘‘கல்வியையும் ஒழுக்கத்தையும் பிள்ளைகளின் ரத்தத்தில் கலந்து வளர்த்திட்டா, எந்த நாட்டுக்குப் போனாலும் ஒழுங்கா இருப்பாங்க. நாலு வீடு வாங்கி வைக்கறதை விட நாலு மொழி சொல்லிக் கொடுத்தா அதுதாங்க நிலைக்கும்’’ என்று சொல்வீர்கள்.
 
உங்கள் சொந்த ஜாதகத்தில் மேஷம், சிம்மம், துலாம், தனுசு ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் அனைத்திலும் சிறந்து விளங்கும் அருமையான பிள்ளைகள் பிறப்பார்கள். ஏதேனும் ஒரு வகையில் நாட்டை ஆள்பவர்களாகவும், சமூகத்திற்கு அத்தியாவசியமான பொருளைக் கண்டறியும் விஞ்ஞானியாகவும் இருப்பார்கள். சனியின் பார்வை மற்றும் சேர்க்கை பெறாமல் மகரம், கும்பத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தால் கடல் கடந்து வியாபாரம் செய்யும் தொழிலதிபர்களாகவும், சமூக சீர்திருத்த சிந்தனையாளர்களாகவும் விளங்குவார்கள். செவ்வாய் மீது குருவின் பார்வை பட்டால் நல்ல மனிதர் என்று நாலு பேர் வாழ்த்தும்படி இருப்பார்கள். பரம்பரைக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ஐந்தாம் வீட்டில் சனி, புதன், சுக்கிரன் இல்லாமல் இருந்தால் நல்லது. சனி அமர்ந்திருந்தால் பிள்ளைகள் உங்களை எதிர்த்துப் பேசுவார்கள். புதனோ, சுக்கிரனோ அமர்ந்திருந்தால் அதிக செலவாளியாகவும், நண்பர்களால் பாதை மாறுபவர்களாகவும் இருப்பார்கள்.

குழந்தை பாக்கியத்திற்குரிய கிரகம் மேஷ செவ்வாயாக வருவதால், செவ்வாயை பலப்படுத்த சில பரிகாரங்கள் செய்யலாம். விபத்துக்குள்ளான அல்லது நோய் தாக்கிய ஆடு, மாடுகளின் சிகிச்சைக்கு உதவுங்கள். பொதுக்
குளத்தை தூர் வார, அகலப்படுத்த உதவுங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள். மாமரக் கன்று நட்டு பராமரியுங்கள். விருட்சிப் பூவால் இறைவனை அர்ச்சித்து வணங்குங்கள். போரில் காயம்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்திற்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineதனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 24 வயது முதல் 30 வரை சூரிய தசை நடைபெறுவதால் 30 வயதுக்குள் திருமணம், குழந்தை பாக்கியம் யாவும் தடையில்லாமல் அமையும். சூரியன் வலுவிழந்து காணப்பட்டால் 29, 30 வயதில் எல்லாம் கிடைக்கும். சந்திர தசை வரை காத்திருக்காமல் 30 வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. 30 முதல் 40 வயது வரை சந்திர தசை நடைமுறையில் இருப்பதால் குழந்தை பாக்கியம் ஒரு கருச்சிதைவிற்கு பிறகு கிடைக்கும். வளர்பிறை சந்திரனாகவோ, குரு சம்பந்தப்பட்ட சந்திரனாகவோ இருந்தால் நுண்ணறிவும் யோகமும் நிறைந்த குழந்தை பாக்கியம் கிட்டும்.

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு ஏறக்குறைய 19 வயது முதல் 29 வயது வரை சந்திர தசை நடைமுறையில் இருப்பதால் 23, 24, 27 வயதிலேயே அழகான குழந்தை கிடைக்கும். ஆனால் சந்திரனுடன் ராகு, கேது சம்பந்தப்பட்டிருந்தால் தாமதமாகும். ஏறக்குறைய 30 வயது முதல் 36 வயது வரை செவ்வாய் தசை நடைபெறுவதால் யோகங்கள் நிறைந்த வாரிசு கிடைக்கும். பொதுவாக பூராட நட்சத்திரக்காரர்களுக்கு இசை, நடனம், ஓவியம், விளையாட்டு போன்ற ஒன்றில் சிறந்து விளங்கும் பிள்ளைகள் பிறப்பார்கள்.

உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 22 முதல் 40 வயது வரை ராகு தசை நடைமுறையில் இருப்பதால் திருமணமே சிலருக்குத் தாமதமாக முடியும். புத்திரகாரகன் குரு உங்களுக்கு நட்பாக வருவதால், உறவினர்கள், நண்பர்கள் வியக்கும் அளவிற்கு நல்ல குழந்தை பிறக்கும். பொதுவாக தனுசு ராசிக்காரர்கள் ரிஷபம், கடக ராசிக்காரர்களை திருமண விஷயத்தில் தவிர்ப்பது நல்லது. 
 
உங்களின் குழந்தை பாக்கியத்தை மேஷச் செவ்வாய்தான் தீர்மானிக்கிறது. செவ்வாய்க்கு அதிபதியாகவும் ஆளும் தெய்வமாகவும் முருகன் திகழ்கிறார். அதிலும் மண்ணாகவும், பெரிய மலையாகவும் இல்லாது குன்றுபோல இருக்கும் முருகன் தலங்களுக்கு சென்று வந்தால் மழலைப்பேறு கிடைக்கும். சென்னைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள மயிலம் முருகனை தரிசியுங்கள். அழகான குழந்தை வீட்டில் துள்ளி விளையாடும்.

மகர ராசியில் பிறந்த உங்களின் பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக ரிஷபச் சுக்கிரன் வருகிறார். ‘எல்லாமே பிள்ளைகளுக்காக’ என்று வாழ்வீர்கள். நம்பர் 1 கல்வி நிறுவனத்தில் படிக்க வைப்பீர்கள். பிள்ளைகளின் குறும்புகளை ரசிப்பீர்கள். ஒற்றுமை உணர்வையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் குழந்தைக்கும் விதைப்பீர்கள். மன்னிக்கும் குணம் கொண்ட நீங்கள், உண்மையை ஒப்புக் கொண்டால் ஏற்பீர்கள். பொதுவாக உங்களுக்கு சுருண்ட முடி, அரிசிப் பல்லுடன் குழந்தை பாக்கியம் அமையும். வாரிசுகள் உங்களை விட உயரமாக வளர்வார்கள்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியாக ரிஷபச் சுக்கிரன் வருவதால் குழந்தை சுவரில் கிறுக்கும்போதே, ‘இவன் பெரிய ஆர்ட்டிஸ்டா வருவான் போலிருக்கே’ என்று நினைப்பீர்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சினிமா, விளம்பரப் பாடலை உங்கள் ஐந்து வயது மகள் முணுமுணுக்கும்போது ‘சிறந்த பின்னணிப் பாடகியாக என் மகளை உருவாக்கலாம்’ என்று பெருமைப்படுவீர்கள். பலர் தங்களது நிறுவனத்தை அல்லது தொழிற்சாலையை தங்கள் வாரிசு பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைப்பீர்கள்.

உங்களின் குழந்தை ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், படிப்பு மட்டுமில்லாமல் உலக அறிவையும் சொல்லி வளர்ப்பீர்கள். ‘படித்தது ஒரு துறை பார்ப்பதோ மற்றொரு துறை’ என்றும் அமையும். பிள்ளைகள் புகழ் பெற்ற கட்டிட நிபுணர்களாகவும், ஆர்க்கிடெக்டாகவும் விளங்குவார்கள்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineசுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையைப் பொறுத்து சில விஷயங்களை சொல்கிறேன். உங்களின் சொந்த ஜாதகத்தில் ரிஷபம், துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் சுக்கிரன் அமர்ந்திருந்தால் திருமணம் முடிந்த உடனேயே குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்தவுடன் உங்கள் அந்தஸ்தும் வருமானமும் படிப்படியாக உயரும். உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் சுக்கிரனுடன், புதனும் அமர்ந்திருந்தால் இயற்பியல் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பான கல்வியில் பிள்ளைகள் முதன்மை பெறுவார்கள். சுக்கிரனுடன் சனி இருந்தால் கப்பல் மற்றும் வானூர்தி தொடர்பான துறையில் சிறந்து விளங்குவார்கள்.

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகி இருந்தாலோ, 5ம் வீட்டில் குரு, சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் இடம் பெற்றிருந்தாலோ கொஞ்சம் பொறுப்பில்லாத பிள்ளைகள் பிறப்பார்கள். அடிக்கடி நீங்களும் பிள்ளைகளை பிரிந்திருக்க வேண்டியிருக்கும்.

சுக்கிரனின் பலத்தை அதிகப்படுத்த வெள்ளை நிற புஷ்பங்கள் தரும் செடி, கொடிகளை வளருங்கள். முடிந்தால் பூவரசு மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். பணப் பற்றாக்குறையால் பாதியிலே நின்று போன வீட்டைக் கட்டி முடிக்க உறவினர், நண்பர்களுக்கு உதவுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்தில் ஏதேனும் ஒரு செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். நலிந்துபோன கலைஞர்களுக்கு உதவுங்கள்.

மகர ராசியில் உத்திராட நட்சத்திரம் 2, 3, 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 20 வயது முதல் 38 வரை ராகு தசை நடைமுறையில் இருப்பதால் திருமணம் சற்றே தாமதமாகி முடியும். ஆனால், குழந்தை பாக்கியத்தில் தடை இருக்காது. ராகுவின் பிற்பகுதி காலமான 29 முதல் 38 வயது வரை உள்ள காலம் அழகான சந்தான பாக்கியத்தைத் தரக் கூடியதாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் அரசு பதவிகளில் அமர வாய்ப்பிருக்கிறது.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 30 வயது வரை ராகு தசை நடைமுறையில் இருப்பதால் குறும்பு, சுட்டித்தனமான குழந்தை கிடைக்கும். பொதுவாக 30 வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. அதன்பின்னர் வரும் குரு தசையில் கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கிடைக்கலாம். குழந்தைகளை முழு சுதந்திரத்துடன் வளர்ப்பீர்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே குழந்தை விஷயத்தில் தடைகள் வரும். சனி பகவானின் ராசியில் பிறந்த உங்களுக்கு நட்சத்திர நாயகனாக செவ்வாய் வருவதால் கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கிடைக்கும். பொதுவாக நீங்கள் ‘கொஞ்சம் செட்டிலாகி விட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்’ என்றெல்லாம் யோசிக்காதீர்கள். சிலருக்கு நீர்க்கட்டி, ஹார்மோன் பிரச்னையால் குழந்தைப்பேறு தள்ளிப்போகும். ஏறக்குறைய 22 வயது முதல் குரு தசை வருவதால் சிகிச்சைக்கு பின்னர் குழந்தை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பொதுவாக மகர ராசிக்காரர்கள் மேஷம், கடகம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.

உங்களின் மழலை பாக்கியத்தை ரிஷபச் சுக்கிரன்தான் தீர்மானிக்கிறது. ரிஷபத்திற்கு முக்தி கிடைத்த தலமெனில், அது உங்களுக்கு நல்லது. அப்படிப்பட்ட தலமே திருவாடுதுறை ஆகும். இங்குதான் கோ என்கிற பசுவிற்கு முக்தியை கொடுத்தார் இறைவன். இந்த பசுவிற்கு முக்தியை அளித்த ஈசனுக்கு கோமுக்தீஸ்வரர் என்று பெயர். எப்போதுமே பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற வேண்டுமெனில் அதற்கு குருவின் அருள் மிக முக்கியமானதாகும். எனவே, இத்தலத்திலுள்ள திருமூலர் ஜீவசமாதியில் அமர்ந்து விட்டு வாருங்கள். கோமுக்தீஸ்வரரும், சித்தரும் விரைவில் குழந்தை பாக்கியத்தை அருள்வார்கள். மயிலாடுதுறை  கும்பகோணம் பாதையில் இத்தலம் உள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்