‘கோச்சடையான்’ல ரஜினியோட நடிக்கிறது கிரேட் ஃபீலிங்னு சொன்ன சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நடிப்புல பிஸியா இருக்கார். மலையாளத்துல அவர் நடிச்ச படம், ‘நரசிம்மன் ஐ.பி.எஸ்’ஸா அவரே நடிச்சு தமிழுக்கு வருது. வாங்க ஆபீஸர்..!
சமீபத்துல ‘வேட்டை’ பார்த்து ரசிச்சுட்டு லிங்குசாமியை பாராட்டிய சூர்யா, ‘‘நம்ம ஒரு படம் பண்ணலாம்’’னு சொல்லியிருக்கார். பர்ப்பஸ் டாக்கா, ஃபார்மாலிட்டி சேக்கா..?
விஜய்யோட பி.ஆர்.ஓவான பி.டி.செல்வகுமார் டைரக்ட் பண்ணப்போற படத்துல நகுல் நடிக்க, ஜீவா ஒரு கௌரவ வேடத்துல வரப் போறாராம். ஹீரோயின் ப்ரியாமணி. இப்ப ஃப்ரீயா மணி..?
சுராஜ் டைரக்ஷன்ல கார்த்தி நடிக்கிற படத்துக்கு முதல்ல பல டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு, இப்ப கடைசியா ‘அலெக்ஸ் பாண்டியன்’ங்கிற பெயர் ஓகே ஆகியிருக்கு. ஒரே பெயரா, ரெண்டு பேரா..?
மணிரத்னத்தோட ‘கடல்’ல அர்ஜுன் வில்லனா வர்றாருன்னு சொல்லியிருந்தோம். இப்ப அரவிந்தசாமியும் ஒரு முக்கிய கேரக்டர்ல நடிச்சுக்கிட்டிருக்கார். ஃபாதர் கேரக்டர்தானே..?
தன்ஷிகாகிட்ட ஒரு வினோத வழக்கம். பொண்ணுகிட்ட செல்போனே கிடையாது. ஒன்லி மெயில் கான்டாக்டுகள்தான். ‘அரவான்’ பார்த்துட்டு எப்படி பாராட்டு தெரிவிக்கிறது தன்ஷ்க்..?
ஓவியத்துக்காகவும், இலங்கைத் தமிழர்களைப் பற்றி எடுத்த ‘பிஃபோர் சன்ரைஸ்’ ஷார்ட் பிலிமுக்காகவும் ஏகப்பட்ட விருதுகளை வாங்கியிருக்க காந்தி மார்க்ஸ், ‘பொல்லாங்கு’ன்னு ஒரு த்ரில்லரோட பயமுறுத்த வர்றார். மிரட்டுங்க...
‘பண்டிகை நாட்கள்ல மட்டும்தான் பெரிய ஸ்டார் படங்கள் ரிலீஸ்’ங் கிற திட்டத்தால பல படங்கள் பிளாக் ஆகவே இன்னும் மூணு மாசத்தில் சில தினங்களை விட்டுக் கொடுக்க முடிவெடுத்திருக்காங்களாம் தயாரிப்பு. ஸோ, இந்த மார்ச்ல சில பெரிய படங்களை எதிர்பார்க்கலாம்.
ரிலீசாகியிருக்க ‘அம்புலி 3டி’ல ரெண்டு ஹீரோவில ஒருத்தரா நடிச்ச அஜய் இப்ப இல்லை. ஆமா... சொந்தக் காரணங்களுக் காக தற்கொலை செய்துக் கிட்டாராம் அவர். படத்துல மரணத்துக்குத் தப்பியவர் நிஜத்துல தப்பிக்க முடியலை..!
சைலன்ஸ்தமிழ்ல விண்ணைத் தாண்டிய அந்த ஒளிப்பதிவாளரோட புகழ் ஆந்திராவுக்கும் போக, அங்கே சிவப்புக் கம்பளம் விரிச்சு வரவேற்றார் அந்த தில்லான புரட்யூசர். பெரிய வீட்டு வாரிசு நடிக்கிற படத்துக்கு கான்ட்ராக்ட் பேசும்போது நம்ம ஆள் சொன்ன சம்பளத்தைக் கேட்டு அவர் மயக்கம் போடாததுதான் குறையாம். இந்த சம்பவத்தால இவர் பேரைக் கேட்டாலே ஆந்திரா அதிருது..!
அந்த மச்சான் நடிகை தமிழ்ல பட வரத்து குறையவே கன்னடப் பக்கம் கரை ஒதுங்க, அங்கே ஒரு போலீஸ் ஆபீசர் கேரக்டரும் கிடைச்சது. ஆனா கொஞ்ச நாளா வீட்லயே உக்காந்து சாப்பிட்டதால ஒரு சுத்து பெருத்திடவே காஸ்ட்யூமர்தான் கலங்கிப் போயிருக்காராம். பொண்ணு கிக் விடும்போது பேன்ட் ‘டர்’ராகிடக் கூடாதேங்கிறதுதான் அவர் கவலை..!
கோலிவுட் கோயிந்து