பலே லவ் ஜோசியம்!



Untitled Document



நட்பின் அடிப்படையில் நாகரிகம் கருதி எஸ்.ராமகிருஷ்ணன் அழைப்பின் பேரில் ரஜினி கலந்து கொண்ட இலக்கிய விழாவை சாரு நிவேதிதா கொச்சைப்படுத்தியிருக்க வேண்டாம். இதுவும் ஒரு மலிவான பப்ளிசிட்டிதானே!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.


பாண்டிராஜ் 'மெரினா’ எடுக்க எவ்வளவு சிரமப்பட்டாரோ, தெரியாது. ஆனா, நீங்க நான்கே பக்கங்களில் பீச் தொழிலாளிகளைப் பேட்டி எடுத்து சென்டிமென்ட், லவ், டிராஜடி, என்டர்டெய்ன்மென்ட் எல்லாம் சேர்த்த ஒரு குறும்படத்தைத் தந்துட்டீங்க.
-ஸ்ரீதேவிராஜன், திருவிடைமருதூர்..


 
தான் வாழ்ந்த காலத்தில் தன் பாடல்களாலும், அதன் பின்னர் தன் இல்லத்தின் மூலமும் காதலை வளர்க்கும் கண்ணதாசனின் ஆன்மா காதலர் தினத்தைப் பெருமைப்பட வைக்கிறது!
 
 
- எம்.ஜி.பரத், திண்டுக்கல்.


கைரேகை ஜோசியம் அருமை. அதிலும் சினேகா-பிரசன்னா, நயன்தாரா-பிரபுதேவா பற்றித் துல்லியமாகச் சொன்ன விபரங்கள் அசர வைத்தன.கைரேகை
 
- மா.கணேசன், திருவாரூர்-1.,
    பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.
 


‘மின்கட்டணத்தை உயர்த்தாமல் மின் வாரியத்தை மீட்கலாம்!’ கட்டுரை உடனே அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது. உண்மையும் அதுதானே! ஏன் அதைச் செய்யாமல் மக்கள் தலையில் பாரத்தை சுமத்துகிறார்கள்?
 
- வே.முருகேசன், சென்னை-88. 


உலக அறிஞர்களின் காதல் பொன்மொழிகள் பல பக்கங்களில் சிதறிக் கிடந்து ரசிக்க வைத்தன.
 
 
- ஜி.சுகுமாரன், வந்தவாசி. 


மறக்க முடியாத ‘சோலைப் புஷ்பங்களே’ தாரா மீண்டும் தாயாக நடிக்க வந்திருப்பது அவங்க தமிழ்நாட்டையும் ரசிகர்களையும் மறக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
 
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை-37.


+2 மாணவர்கள் சென்டம் வாங்க அருமையான, அற்புதமான, அவசியமான, அதிநுட்பமான டிப்ஸ்கள் வாரி வழங்கி வரும் தங்களுக்கு மாணவ, மாணவியர் சார்பாக எனது நன்றிகள்.
- ப.ஜனனி (+2 மாணவி), புதுச்சேரி.


யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் என்றதும் கவலைப்பட்ட கோடானு கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் சீக்கிரம் குணமடைந்து புதிய தெம்புடன், புது வீரராக வலம் வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 
- எஸ்.இரமணி, மதுரை.


காதல் ஸ்பெஷலில் ஒரு பக்கக் கதைகள், காதலர் பற்றிய செய்திகள், கவிதைகள் எல்லாமே பொருத்தமாக போட்டிருந்தது நன்றாக இருந்தது. பாராட்டுகள்.
 
- ஆர்.அம்பிகா, பெங்களூரு.


குப்பையும் கோபுரத்தில் அமர்த்தும் என்பதை தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியுள்ள சுஜாதா நிஜமான ரோல் மாடல்!
- டி.வி.மரகதம், ஈரோடு.