ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்ட்டிங்கில் செம காசு!



Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazine

        பெரிய பெரிய தேவாலயங்கள், பழங்காலத்துக் கட்டிடங்கள், அருங்காட்சியகங்களில் ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளில் ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்ட்டிங்கை பார்க்கலாம். கண்ணாடிக் கதவுகளில் கலர் கலர் அழகோவியங்களாக வரையப்பட்ட ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்ட்டிங், பகலிலும் இரவிலும் வெளிச்சத்தில் வீட்டுக்கு அழகு சேர்க்கும். புது வீடு கட்டும் பலரும் இப்போது வீட்டை அழகுபடுத்த ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்டிங்கை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். 

‘‘ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்ட்டிங், எல்லாக் காலங்களிலும் காசு கொட்டும் அருமையான பிசினஸ்’’ என்கிறார் கைவினைக்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.

‘‘முன்னல்லாம் கலர் கட் கிளாஸ் துண்டுகளை வெட்டி, வெல்டிங் பண்ணித்தான், ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்ட்டிங் ரெடி பண்ணிட்டிருந்தாங்க. இப்ப அது ரொம்ப ஈஸியாயிருச்சு. கோலமும் மெஹந்தியும் போடத் தெரிஞ்ச யார் வேணாலும் இதைப் பண்ணலாம்’’ என்கிற லதாமணி, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டத் தயாராக இருக்கிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘கிளாஸ், கிளாஸ் லைனர், சால்வென்ட் கலர்கள், 3டி கிளிட்டர் (விருப்பமான கலர்களில்), கிரிஸ்டல், மணிகள், பிரஷ்... 1 சதுர அடி கண்ணாடிக்கான மொத்த முதலீடு வெறும் 150 ரூபாய்.’’

என்ன ஸ்பெஷல்? என்னென்ன டிசைன்?

‘‘பகல்ல சூரிய வெளிச்சம் படும்போதும், ராத்திரில நிலா வெளிச்சம் படும்போதும், வீட்டை கலர்ஃபுல்லா அழகாக்கிறதுதான் ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்ட்டிங்கோட ஸ்பெஷல். வீட்டோட நிலை, கதவு, ஜன்னல்கள்ல பண்ணிட்டிருந்த இந்த ஓவியத்தை இப்ப கட்டில் முகப்புல, சீலிங்ல, சுவர்கள்ல கூட பண்றாங்க. ஜியாமெட்ரிகல் வடிவங்கள், பூக்கள், மனித உருவங்கள் எல்லாம் பொதுவா பலரும் விரும்பற டிசைன்கள். அதுலயே கிரிஸ்டல் ஒட்டறது, கல் பதிக்கிறது, மணிகள் வைக்கிறதுனு அவங்கவங்க விருப்பத்துக்கேத்தபடி பண்ணிக் கலாம்.’’

வர்த்தக வாய்ப்பு? லாபம்?

‘‘ஒரு நாளைக்கு 40 சதுர அடி வரை பண்ணலாம். புதுசா கட்டிடம் கட்டற இடங்கள்ல ஆர்டர் பிடிக்கலாம். ஆபீஸ், ஐ.டி. கம்பெனிகளையும் அணுகலாம். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?

‘‘3 நாள் பயிற்சிக்குக் கட்டணம் 2 ஆயிரத்து 500 ரூபாய்.’’
-ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சி.எஸ்.