டக் அவுட் நயன்தாரா?





உம்மைப் போன்ற நாரதர்கள் புண்ணியத்தில் நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸும் 'டக் அவுட்’தானா? பெண் பாவம் பொல்லாததய்யா!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.


‘மனிதர்களே மோதாத யுத்தம்!’ கட்டுரையைப் படித்தபோது மனிதர்களின் அறிவியல் பார்வை விசாலமாகும்போது அது அழிவை நோக்கியே பயணிக்கிறதே என்ற கவலை எழுந்தது.
- எம்.எஸ். இப்ராகிம், சென்னை-91..


 
எம்.ஜி.ஆருக்கு ஒருவிதமாகவும் சிவாஜிக்கு ஒருவிதமாகவும் தன் குரலை மாற்றி மூன்று தலைமுறை தாண்டிப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கு டாக்டர் பட்டம் போன்ற எந்தப் பட்டங்களும் தராதது பெரிய சோகம்தான். நல்லதொரு கலைஞனை வாழும் காலத்திலேயே கொண்டாடும் நாள் என்று வரும்? 
 
- உமா மோகன்தாஸ், திண்டுக்கல்.


மூன்று தலைமுறைகளைக் கடந்து, 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய டி.எம்.எஸ். நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
 
- அ.பால்ராஜ், கொத்தாம்பாடி.
 

‘முதல்வர் ஒரு சர்வாதிகாரி - கொதிக்கும் அமைச்சர் யார்? என்று பரபரப்புடன் பக்கங்களைப் புரட்டினால், அது மேற்கு வங்காள மேட்டர் என்பதை அறிந்ததும் ‘சப்’ என்றாகிவிட்டது. ஆனாலும், உமக்கு குறும்பு அதிகம்தான்!
 
-அய்யாறு வாசுதேவன், சென்னை-14. 


‘தொழிலில் உண்மை, கடுமையான உழைப்பு இவை இரண்டும் இருந்தால் பிறகு எல்லாம் தானாகவே கிடைக்கும்’ என்ற நல்லி குப்புசாமி செட்டியாரின் அனுபவ வார்த்தைகள் உயர்வுக்கு வழி காட்டும் உன்னதமான வெற்றி மந்திரம்! 
 
- கஸ்தூரி, காட்பாடி. 


எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘இயல்’ விருது வழங்கப்பட்டிருப்பது இலக்கியத்திற்குப் பெருமை. ‘எழுத்துதான் எனது வாழ்க்கை’ என்கிற அவரது தன்னடக்கமான தாரக மந்திரம் அவரை இன்னும் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.
 
- கா.சரவணன், சிதம்பரம். 


ரூபாய் 5 லட்சம் வரை மாத சம்பளம் பெற இருந்த ரூசோ இப்படி மாறியது அதிசயம்தான்! கண்டிப்பாக அவருக்கு வெற்றி கிடைக்கும். அவர் நிதர்சனமான ரோல் மாடல்தான்! 
 
- வே.முருகேசன், சென்னை-88. 


என்னைக்குமே நடிகனுக்காக கதை இல்லை. நான் நடிகனா தெரிவதே படைப்புகளாலதான்’ என்கிற பிரகாஷ்ராஜ் டைரக்டராகவும் ஜெயிக்கட்டும்!
 
 
- வி.என்.கதிர்வேல், வேலூர்-6.