நீட் மட்டுமல்ல...அனைத்து அரசுத் தேர்வு வினாத்தாள்களும் இப்படித்தான் இந்தியாவில் லீக் ஆகின்றன!



நீட் தேர்வுக் குளறுபடி, நெட்தேர்வு மோசடி... இன்னும் பல தேர்வு களேபரங்கள் மாணவர்களைக் குறுக்குச் சந்தில் கொண்டுபோய்விட்டதுதான் சமீபத்திய ஹாட் டாபிக்.ஆனால், இப்படி வினாத் தாள் கசிவது இது முதல்முறையும் அல்ல; புதிதும் அல்ல.ஆம். கடந்த காலங்களில் இதுபோல் எண்ணற்ற முறை கேள்வித்தாள்கள் கசிந்துள்ளன. 
அப்படி கசிந்தவை எப்படி எல்லாம் நடந்தன என்று ‘க்வின்ட்’ (quint.com) என்ற இந்திய வலைத்தள இதழ் கிட்டத்தட்ட இன்வெஸ்டிகேட் செய்து ஓர் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. மொத்தம் ஆறு வழிகளில் இந்த மோசடிகள் இதுவரை நடைபெற்றிருக்கின்றன என்று சொல்லும் அந்த இதழ், கடந்த காலங்களில் நடைபெற்ற மோசடிகளைப் பட்டியலிட்டிருக்கிறது.  

அந்த 6 மோசடி வழிகள்:

1. தேர்வுத் தாள் தயாரிக்கும் இடம். இதில் கடந்த காலங்களில் எந்தவிதக் குற்ற சம்பவங்களும் நடைபெறவில்லை.

2. பிரிண்டிங் பிரஸ். இதில் ரிஸ்க் அதிகம்.

அ. 2024ல் உத்திரப்பிரதேச மாநிலத்தின் RO மற்றும் ARO தேர்வுத் தாள்கள் மத்தியப் பிரதேச பிரிண்டிங் பிரஸ்சிலிருந்து லீக் ஆனது.

ஆ. 2021ல் அதே உத்திரப்பிரதேசத்தில் டெட் (TET) பேப்பர் கசிவு. இதுவும் ஒரு பிரிண்டிங் பிரஸ்சிலிருந்துதான் நடந்தது.

இ. 2024ல் பீகார் மாநிலம் டீச்சர் தேர்வுக்கான தாள்கள் கொல்கத்தாவிலிருந்த ஒரு பிரஸ்சிலிருந்து கசிந்தது.

ஈ. 2020ல் இமாச்சல் பிரதேச போலீஸ் தேர்வுத் தாள் காசியாபாத் பிரஸ்சிலிருந்து கசிந்தது.

உ. 2018ல் குஜராத் போலீஸ் தேர்வுத் தாள் கர்நாடகா மாநிலம் மணிப்பால் பிரஸ்சிலிருந்து கசிந்தது.

3. போக்குவரத்து 1. தேர்வுத் தாள்கள் தயாரிக்கப்பட்டதும் அது ஒரு முகவருக்கு போகும்போது கசிவது.

அ.  2024ல் உத்திரப்பிரதேச மாநிலம் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான தாள்கள் குஜராத்தில் அகமதாபாத்தின் ஒரு முகவருக்குப் போனபோது கசிந்தது.

ஆ. பீகார் போலீஸ் தேர்வுக்கான தாள்கள் பாட்னாவில் இருந்த ஒரு முகவரின் கோடவுனுக்கு போனபோது கசிந்தது.

4. போக்குவரத்து 2: முகவரிடமிருந்து தேர்வை நடத்தும் அரசு நிறுவனங்களுக்குப் போகும்போது கசிவது.

அ. 2024ல் பீகார் அரசு நடத்திய டீச்சர் தேர்வுக்கான தாள்கள் பாட்னா அரசு பொறுப்பாளர்களுக்கு போகும்போது கசிந்தது.

5. தேர்வு நடைபெறும் நகர் அல்லது கிராமத்துக்கு(சென்டர்) போகும்போது கசிவது.

அ. 2021ல் இராஜஸ்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேர்வுத் தாள்கள் ஜெய்ப்பூர் நகருக்குப் போனபோது கசிந்தது.

ஆ. 2034ல் உத்திரப்பிரதேச மாநிலத்தின் போலீஸ் தேர்வுக் கமிஷன் நடத்திய ஆர்.ஓ மற்றும் ஏ.ஆர்.ஓ தேர்வுத் தாள்கள் அந்த மாநிலத்தின் பிரயாக் நகரில்
கசிந்தது.

6. தேர்வு நிலையங்கள்

(எக்சாம் ஹால்): இதுவும் ஹை ரிஸ்க்கான ஏரியா. பொதுவாக ஆள்மாறாட்டத்தால்தான் இந்தக் குற்றங்கள் நடைபெறுகிறது. இது தேர்வுத் தாள் கசிவு இல்லை என்றாலும் இதிலும் தேர்வு மோசடிகள் பல நடைபெறுவதாக சொல்கிறது இந்த ஆய்வு. பைப்புல தண்ணி கசியலாம். மாணவர்களின் கண்ணிலிருந்து இரத்தம் கசியலாமா?

டி.ரஞ்சித்