வாவ் ஜம்ப்!



உயரம் தாண்டுதல் பல்வேறுபட்ட திறமைகளைக் கோரும் சவாலான  போட்டி. அதனால்தான் ஆண், பெண் என்று இரண்டு பிரிவிலும் இப்பிரிவின் சாதனைகள் சிலாகிக்கப்படுகின்றன. 
ஆண்கள் பிரிவில் 1988ல் நிகழ்த்தப்பட்ட சாதனையான 2.43மீ அளவை  இன்னுமே யாரும் முறியடிக்கவில்லை. கியூபா வீரரான ஹாவியேர் சோட்டோமயோர் இந்த சாதனையை தொண்ணூறுகளில் மீண்டும் மீண்டும் அவரே  முறியடித்துக் கொண்டிருந்தார். தற்போது அவரின்  சாதனையான 2.45மீ (8 அடி!) இன்னுமே நீடிக்கிறது.

பெண்கள் பிரிவில் 1987ல் சாதனை நிகழ்த்தப்பட்டது. தடகளப் போட்டிகளிலேயே நீண்டநாள் தாக்குப்பிடித்த சாதனை என்ற பெருமையைக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 37 ஆண்டு காலம் யாரும் நெருங்க முடியாமல் இருந்த சாதனையை ஒரு 22 வயதான உக்ரைனிய வீராங்கனை மஹூசிக் வீழ்த்தியுள்ளார். 

மஹூ சிக்கின் முந்தைய சாதனை 2.06மீ. அதையே உலக அளவில் ஓரிருவர்தான் தாண்டியிருக்கிறார்கள். அதிலிருந்து மேலும் நான்கு செமீ அதிகம் தாண்டுவது என்பது வாவ் ரகம். போரின் அழிவில் உழன்று கொண்டிருக்கும் உக்ரைன் மக்களுக்கு இந்த உலக சாதனை மாபெரும் ஊக்கத்தை அளித்திருக்கிறது.  

-கார்த்திக் வேலு