ரூ.2 கோடி வேண்டாம்!



நடிகைகள் தங்களது திருமண வைபவத்தை இப்பொழுதெல்லாம் பணமாக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே, அவர்கள் செய்யும் முதல் வேலை, தங்களது மானேஜர்களை விட்டு ஏதாவது ஓடிடி தளத்தில் பேசச் சொல்வதுதான்.
எஸ். திருமணத்தை எக்ஸ்க்ளூசிவ்வாக ஸ்ட்ரீம் செய்ய பேரம் பேசுகிறார்கள். அந்த வகையில் ஒரு கோடி ரூபாய் முதல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார் தாப்ஸி.

சமீபத்தில் தனது நீண்ட கால நண்பர் மத்தியாஸ் போயெவைத் திருமணம் செய்து கொண்டார். இவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர், பாட்மிண்டன் விளையாட்டு வீரர். நடிகரும் கூட.
இந்த காம்பினேஷன் திருமணம், இரு நாட்டு கலாசாரங்களைக் கலந்திருக்கும் என்பதால், ஓடிடி தளங்கள் ஆர்வம் காட்டின. 

ஆனால், தாப்ஸி இதை விரும்பவில்லை. ‘திருமணம் என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இதை ஏன் பொதுவில் வைக்க வேண்டும்’ என மறுத்துவிட்டாராம். இதனால் தாப்ஸி ஏறக்குறைய ரூ.2 கோடி வரை இழந்திருக்கிறாராம். ஐ டோன்ட் கேர் என்பதே இதற்கு தாப்ஸியின் பதிலாம்.

காம்ஸ் பாப்பா