ஸ்ரீதேவியின் பயோபிக்?



பிரபலங்களின் வாழ்க்கை சரித்திரத்தை பயோபிக் ஆக எடுப்பது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. லேட்டஸ்ட்- தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்.
அந்தவகையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையையும், திரையுலக பயணத்தையும் ஒரு படமாக எடுக்கலாம் என்று சிலர் யோசித்து இருக்கிறார்கள். இதற்காக போனி கபூரிடமும் தங்களது ஆர்வத்தைப் பற்றி கூறியிருக்கிறார்கள்.

ஆனால், ‘இந்த மாதிரி முயற்சிகளையெல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது. என் மனைவியின் பயோபிக்கை எடுக்க நான் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்’ என்று போனி கபூர் மறுத்துவிட்டாராம்.

திரையுலகப் பயணத்தை எடுத்தால் அதில் ஸ்ரீதேவியின் அந்தரங்க வாழ்க்கையையும் கூறியே ஆகவேண்டும். அது தவிர ஸ்ரீதேவியுடன் நடித்த பல நடிகர்கள் இன்று உச்சத்தில் இருக்கிறார்கள். சமூகத்தில் பெரும் புகழோடும், அடையாளத்தோடும் இருக்கிறார்கள்.  

தவிர போனிகபூர் திரைப்பட தயாரிப்பில் முனைப்போடு இருந்து வருகிறார். ஸ்ரீதேவி - போனிகபூரின் வாரிசுகளான ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அதனால் எதற்கு தேவையில்லாத வம்பில் மாட்டவேண்டுமென போனிகபூர் மறுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.

காம்ஸ் பாப்பா