விஜய் 69ல் ஹெச். வினோத்?



‘‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்’ என கமல் எங்கு சென்றாலும் தன்னுடனேயே அழைத்துச் சென்ற ஹெச். வினோத், இப்போது ‘விஜய் 69’ படத்தை இயக்கப் போவதாக செய்திகள் கசிகின்றன. 
விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமிருக்கும்... எப்படியும் பெரும் வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து கட்சியை நடத்துவதற்கும் நிதி தேவை என்பதால் விஜய் பெரும் தொகையை சம்பளமாக எதிர்பார்க்கிறாராம். அதாவது 250 கோடி சம்பளம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என விஜய் தரப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.

இப்படி விஜய் சம்பளம் தொடர்பாக கிசுகிசு உலவ... ஹெச்.வினோத்தான் இப்படத்தை இயக்கப் போகிறார் என மறுபக்கம் சூடம் ஏற்றி சத்தியம் செய்தபடி இருக்கிறார்கள்.
அஜித்தை வைத்து ‘மங்காத்தா’ இயக்கிய வெங்கட் பிரபு இப்பொழுது ‘விஜய் 68’ படமான ‘GOAT’ஐ டைரக்ட் செய்கிறார்.அந்த வகையில் அஜித்தை வைத்து அடுத்தடுத்து மூன்றுபடங்களை இயக்கிய ஹெச்.வினோத், ‘விஜய் 69’ படத்தை டைரக்ட் செய்வார் என்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா