ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கீர்த்தி சுரேஷ்!



இட்லியை குறுக்குவாக்கில் இரண்டு ஸ்லைஸ் ஆக வெட்டி கன்னத்தில் ஒட்டிவைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு கொழுகொழு கன்னங்களோடும் அழகாய் உருட்டிப் பேசும் கண்களோடும் நடித்து அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.  
பாலிவுட்டுக்குப் போகவேண்டுமென்றால் மெல்லிசான உடல்வாகு வேண்டும். இல்லையென்றால் ‘சைஸ் ஸீரோ’ என எலும்பும் தோலுமாய் இருக்கும் மாடலிங் பெண்களைப் போல் இருக்கவேண்டும். எனவே, தனது உடல் எடையைக் குறைக்கும் வேலைகளில் இறங்கினார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால், பாலிவுட்டில் அவர் எதிர்பார்த்தமாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேநேரம் இங்கே அவருக்கு என்று இருந்த மார்க்கெட்டின் வெயிட்டும் குறைந்து போனது.
இதுகுறித்து பாலிவுட் இயக்குநர் அமித் ஷர்மா கூறியிருக்கிறார். ‘பதாய் ஹோ’ படத்தை இயக்கிய இவர் இப்பொழுது ‘மைதான்’ படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

இதில் அஜய்தேவ்கனின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அமித் ஷர்மா நினைத்தது கீர்த்தி சுரேஷைத்தான். ஆனால், ப்ரியா மணி நடித்திருக்கிறார். ‘ஹீரோவின் மனைவி இப்படித்தான் இருக்கவேண்டுமென நினைத்த உருவத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றி அவரைப் பார்த்தோம். ஆனால், எடையைக் குறைத்திருந்தார். எனவே, ப்ரியா மணியை ஒப்பந்தம் செய்தோம்...’ என்கிறார் அமித் ஷர்மா.

காம்ஸ் பாப்பா