ஆப்பிள் மியூசிக்!ஆப்பிள் நிறுவனம் பாரம்பரிய இசைப் பிரியர்களுக்காகவே ஒரு புதிய appஐ பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது. இதை வருகிற மார்ச் 28ம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன்பெயர், ‘ஆப்பிள் மியூசிக் கிளாசிக்கல்’. இந்த ஆப் ஐபோன் 6 மற்றும் அதற்குமேல் ஐபோன் வெர்ஷன் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக சப்போர்ட் செய்யும். இந்த ஆப்பை ஆகச்சிறந்த ஆடியோ தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது ஆப்பிள் நிறுவனம்.

கிளாசிக்கல் இசையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறும் ஆப்பிள், இதில் முதற்கட்டமாக ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான டிராக்குகளை இணைத்துள்ளது. அதுமட்டுமல்ல. புதிய வெளியீடுகள் முதல் உலகின் தலைசிறந்த படைப்புகள், ஆயிரக்கணக்கான பிரத்யேக ஆல்பங்கள் உள்ளிட்டவற்றை அன்லிமிட்டடாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

பி.கே.