ஃபைட்டர்!
‘மையோசிடிஸ்’ என்னும் ஆட்டோ இம்யூன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சமந்தா, சில மாதங்கள் கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால் இவர் கமிட்டான இந்திப்படம்,
வெப் சீரீஸ், தெலுங்குப் படம் என எல்லாமே அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இப்போது உடல்நலம் தேறியதால், சமந்தா மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். கொடுத்த கால்ஷீட்களின் அடிப்படையில் இவர் முதலில் நடிக்கவேண்டியது, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ‘குஷி’ படத்தில்தான். ஆனால், சமந்தா ‘சிடாடல்’ வெப் சீரீஸின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.
இது தெலுங்கில் சர்ச்சையை கிளப்பியது. விஜய் தேவரகொண்டா தனது அடுத்த பட ஷூட்டிங்குக்கு புறப்பட ஆயத்தமாக, ‘குஷி’ இயக்குநர் சிவா நிர்வானா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.
ஆனால், மைக்ரோ நொடியில் எல்லாம் மாறிவிட்டது. யெஸ். ‘சிடாடல்’ ஷூட்டிங்கை முடித்த சமந்தா, ‘குஷி’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துவிட்டார்!
போதாதா... ஒட்டுமொத்த ‘குஷி’ யூனிட்டும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க... இதோ ஷூட்டிங் பரபரப்பாக நடக்கிறது.‘‘சமந்தா ஒரு ஃபைட்டர். போராடி வெற்றி பெறுவதில் அவருக்கு போட்டியே இல்லை!’’ என நெகிழ்கிறார் சிவா நிர்வானா.
காம்ஸ் பாப்பா
|