HOT கிசுகிசு



புதுக் கணக்கு!

இன்னமும் அந்த ஹீரோவின் கஸ்டடியில்தான் சிலிர்க்கிறார் நடிகை. இதில் நடிகரின் கருணைக் கண்களும் நடிகை மீதே இருக்க, தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார். போனஸாக நண்பர்களின் படங்களுக்கும் கெத்து வேடங்களுக்கு சிபாரிசு செய்கிறார். இந்நிலையில் ஹீரோ இப்போது அக்கட தேசத்திலும் பரபரப்பதால், அங்கேயும் சான்ஸ் வாங்கிக் கொடு என அடம் பிடிக்கிறாராம் நடிகை!

தீவே எனக்கு சொந்தம்!

மாலத்தீவில் ஸ்விம்சூட்டில் குளுகுளுத்த நடிகைகளின் லிஸ்ட் பெரிது. பாலிவுட்டில் இருந்து பலரும் அங்கே புரொமோஷனுக்கு போய் பிகினியில் புன்னகைத்து வந்தாலும், அந்த இரண்டெழுத்து பட நடிகைக்கு மட்டும், ‘மீண்டும் மீண்டும் ஆவோஜி’ ஆஃபர் வந்து கொண்டிருக்கிறதாம்.

காஸ்ட்யூம் செலவில் இருந்து ஜூஸ் முதற்கொண்டு எல்லாவற்றையும் ரிசார்ட்காரர்களே ஏற்றுக் கொள்வதால், ‘லாக்டவுன் எல்லாம் முடியட்டும்... பறந்து வர்றேன்...’ என க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

அக்கரை பச்சையா?!

காதல் கணவருடன் மும்பையில் வசித்து வரும் அந்த நடிகை, கோலிவுட்டில் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டு ஆடிப்போய்விட்டார். விளைவு, இனி பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தலாம் என முடிவெடுத்துவிட்டார்.
என்ன... பாலிவுட்டில் சான்ஸ் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை!l

ஷியஸ்