வலைப் பேச்சு
@manipmp - தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது... கடைத்தெரு பக்கம் வரவும் - By கொரோனா!
@HAJAMYDEEN- தோல்வியை ஒப்புக் கொள்ளாதவர்கள் இரண்டாவது முறையாகத் தோற்கிறார்கள்.
@star_nakshatra - ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை நீங்கள் எழுப்பிவிடும் விதமே சொல்லிவிடும்... நீங்கள் மென்மையானவரா கடினமானவரா என்று!
@murugan_itz - வெளிநாட்ல இருக்கறதுல சின்ன ஆறுதல் என்னன்னா, வீட்ல இருக்கறவங்க சந்தோஷமா இருக்காங்க என்கிற நெனப்புதான்...
@ItsJokker - எத்தனை பெரிய மனிதனையும் வீழ்த்திவிடும் இரு குணங்கள்... கர்வமும், தலைக்கனமும்; எத்தனை பெரிய உறவையும் வீழ்த்தி விடும் இரு குணங்கள்... பொய்யும், சந்தேகமும்!
@MP Udayasooriyan - ‘அண்ணே... இது Dead End...’‘Deadனாலே Endதான் தம்பி!’
@PEETER_MAMA - 11 மணிக்கு ஜெயா டிவில எம்ஜிஆர் பாட்டு... கலைஞர் டிவில சமையல் குறிப்பு வந்தா தேர்தல்ல யார் ஜெயிச்சானு முடிவு பண்ணிடுவோம்... ஒன்றரை கிலோமீட்டர் ஊரை வைச்சுக்கிட்டு ஒன்றரை நாளா எண்ணிக்கிட்டு இருக்கீங்க! என்ன அமெரிக்காவோ... என்ன எழவோ!
@S Ganeshkumar - அதுல ஒருத்தன் கேக்குறான், ‘அடுத்த வருஷம் கமல் பங்கேற்கிற ரியாலிட்டி ஷோ செட்டை, ஜார்ஜ் கோட்டை மாதிரி போடுவாங்களா’னு!
@Pattukkottai Prabakar Pkp - பணியில் இருக்கும்போது கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை 1500 செவிலியர்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். முதலாம் உலகப் போரில் இதே எண்ணிக்கையில் செவிலியர்களை இழந்திருக்கிறோம். இந்தப் பெருந்தொற்றும் போருக்கு நிகரானதே. அது நாடுகளுக்கிடையில் நடந்தது. இது நாடுகளுக்குள் நிகழ்கிறது. அந்த செவிலியர்கள் அனைவருக்கும் கரம் கூப்பி கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்.
@Sen Balan - கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா, ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். கமலாவின் சகோதரி மாயா ஹாரிஸ், டோனி என்கிற கருப்பினத்தவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு திருமணத்திற்கு முன்பே மீனா என்ற மகள் இருக்கிறார்.
மீனா, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நிகோலஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். கமலா ஹாரிஸின் தாய்மாமா பாலச்சந்திரன் மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த பெண்மணியைத் திருமணம் செய்துள்ளார். கமலா ஹாரிஸ் டக்லஸ் என்கிற யூதரை திருமணம் செய்துள்ளார்.
அன்புக்கு அடைக்குந்தாழ் இல்லை என உலகம் இவ்வாறு செல்கையில் ஒரே நாட்டைச் சேர்ந்த இருமதத்தவர் திருமணம் செய்து கொள்வதை சித்தரித்த விளம்பரத்தை எதிர்த்து இந்தியா போராடிக் கொண்டுள்ளது.
@பிச்சுமணி - செய்தி: மீன் பார்சல் ஏற்ற அனுமதி - விரைவுப்பேருந்துகளை இனி சைவம், அசைவம்னு பிரிச்சிடுங்க!
@Ramanujam Govindan - கணவனும் கடவுளும் ஒன்று... பெண்கள் செய்த தவறுக்கு பழிபோட ஒருவர் வேண்டுமே! அதனால்...
@Meenakshi Sundaram - காதல் படம் பாத்து நமக்கு யாருமே இல்லனு ஃபீல் பண்ணறத விட... பேய்ப் படத்தை பார்த்து நம்ம கூட யாரோ இருக்கற மாதிரியே ஃபீல் பண்ணிக்கலாம்! - சினிமா அப்டேட்ஸ்.
@Rajan Kurai Krishnan - அதென்னாது வேல் யாத்திரை..? உண்மையான பக்தி இருந்தா அலகு குத்திட்டு போப்பா!
@Vinayaga Murugan - கொரோனா லாக்டவுன் அறிவித்த நாளிலிருந்து தொடர்ந்து விவசாயம் சார்ந்த வீடியோக்கள், தகவல்களை பார்த்து வருகிறேன். அதுதொடர்பான பங்குச்சந்தை செய்திகளையும் கவனித்து வருகிறேன். பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்த எண்ணற்ற தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். கடந்த சிலவருடங்களாக மந்தமாக இருந்த ஆட்டோமொபைல் துறை மெல்ல மேலே வருகிறது. ஆச்சரியமூட்டும் வகையில் வாகனங்கள் வாங்கியவர்களில் கணிசமானோர் கிராமப்புறப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அதுபோல புதிதாக விவசாயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதில் பலர் முதல்தலைமுறை, இரண்டாம் தலைமுறை படித்தவர்கள். இவர்களின் தாத்தா அல்லது அப்பா விவசாயம் பார்த்து இவர்களை படிக்கவைத்து பெருநகரங்களுக்கு வேலைக்குவந்து சில ஆண்டுகள் பணியாற்றி வேலை பிடிக்காமல் மீண்டும் ஊருக்கே செல்லலாம் என்று யோசனையில் இருந்தவர்கள். லாக்டவுனுக்குப் பிறகு ஊர்களுக்குச் சென்று மீண்டும் விவசாயத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
இதில் சிலர் புத்திசாலித்தனமாக நவீன தொழில்நுட்பமான மொபைல், ட்ரோன் என்று இறங்கியுள்ளார்கள். மொபைல் மூலமாக நான்கைந்து ரெயின்கன் வைத்து அதை மொபைல் செயலி வழியாக இயக்கமுடியும். அதுபோல ட்ரோன்களை வைத்து அரைமணிநேரத்தில் ஒரு ஏக்கரில் பூச்சிமருந்து அடித்துவிடலாம்.
பலர் ஆட்டுப்பண்ணை, நாட்டுக்கோழி என்று இறங்கியுள்ளார்கள். பலரும் நீர் அதிகம் தேவைப்படாத ஒருங்கிணைந்த பண்ணைகளுக்கான சூப்பர் நேப்பியர் போன்ற பயிர்களைத்தான் வளர்க்கிறார்கள்.
யோசித்துப் பார்த்தால், வாடகை கொடுக்க வேண்டியதில்லை. சாப்பாட்டுக்கு பெரிதாக செலவு செய்ய வேண்டியதில்லை. குறிப்பாக சம்பாதிப்பதில் முப்பது சதவீதம் வருமானவரி கட்டத்தேவையில்லை. சென்னையில் மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும் கையில் பெரிதாக எதுவும் நிற்காது. சொந்த ஊரில் மாதம் முப்பதாயிரம் சம்பாதித்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
கொரோனாவுக்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைபார்க்கும் மோகம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்று நினைக்கிறேன். ஆனால், இது ஒரு சுழற்சிதான். நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் மக்கள் மாறி மாறி இடம்பெயர்ந்து சென்றுகொண்டே இருப்பார்கள். இவர்கள் நகரங்களிலிருந்து வெளியேறினால் இன்னொரு குழுவினர் மீண்டும் நகரங்களுக்கு வருவார்கள். இப்படியொரு சுழற்சி இருப்பதுதான் நகரம், கிராமம் இரண்டுக்குமே நல்லது என்று நினைக்கிறேன்.
@Ameer Ali Dawood - அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முஸ்லிம் உறுப்பினர்களின் படங்கள் பலராலும் சமூக வலைத்தளங்களில் பெருமையாக பதியப்பட்டு வருகிறது. திட்டமிட்டு சீரழிக்கப்பட்ட சோமாலியா நாட்டிலிருந்து அகதிகளாகக் குடியேறிய சில முஸ்லிம்கள் அமெரிக்க அரசியலில் உச்சநிலையை எட்டிப்பிடிக்க போராடி வருவது பெருமைக்குரிய மகிழ்ச்சியான செய்திதான்.
ஆனால், மகிழ்ச்சியைக் காட்டிலும் படிப்பினையும் பாடமும் அதிகமாக இருக்கிறது.வாழ்க்கைக்கு மிகச்சரியான இலக்கு நிர்ணயித்துக் கொண்டு, உயர்கல்வியை தேர்வு செய்ததிலும் அதன் பிறகான அரசியல் பயணத்தில் தளராத மனமும் போராட்ட குணமும்தான் அவர்களை இன்று வெற்றியாளர்களாக முன்னிறுத்தியிருக்கிறது.
ஒவ்வொருவரும் தேர்வு செய்து படித்துள்ள உயர்கல்வி படிப்புகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அனைவரும் சராசரியாக 30 ஆண்டு கால உழைப்பில் இதை சாதித்துள்ளனர். நம் கண்களுக்கு அவர்களின் வெற்றி மட்டுமே தெரிகிறது. ஆனால், அதற்குப் பின்னால் வறுமையின் வேதனைகளும் அவமானங்களும் எண்ணிலடங்கா தோல்விகளையும் சகித்து கடந்து விடா முயற்சியின் விளைவுகள்தான் இந்த வெற்றி என்பதுதான் எதார்த்தம்.
@அ. பாரி - ஏசி ஃபில்ட்டரைக் கழட்டி சுத்தம் செய்வது பெரிய கம்ப சூத்திரமென்று இதுநாள் வரை எண்ணியிருந்தேன். ஒரு யூ டியூப் வீடியோ பார்த்தேன், களம் இறங்கினேன். இப்பதான் அறை மொத்தமும் ஏசியோ ஏசியா இருக்கு. வழக்கமாக இதுக்கொரு 600 ரூபாய் மொய் வைப்பேன். என்ர வீட்டம்மணி வீடு திரும்பியதும் இதைச் சொன்னால், கன்னத்தைப் பிச்சி வாயில் போட்டுக்குவா... ஐ ஆம் ஈகர்லி வெயிட்டிங்...
@erode_kathir - ஒரு வண்டுக்கு இத்தனை வண்ணங்களை வைக்கும் இயற்கை மனிதர்களை மட்டும் எதுவுமின்றி படைத்துவிடவில்லை.
@ஜ்யோவ்ராம் சுந்தர் - தில்லியில் சுற்றுச் சூழல் கெட்டதற்குக் காரணம் பட்டாசா? உலகில் எங்காவது காற்று மாசுக்குக் காரணம் வாணங்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? ஒன்றிரண்டு நாட்கள் கொண்டாடினால் எவ்வளவு வெள்ளைக்காரர்களுக்கு எரிச்சல்! ஏன்? சுற்றுச்சூழலை அதிகம் அழிப்பவர்களே நமக்கு அறிவுரையும் வழங்குகிறார்கள். அதை விடுங்க... பெரும்பாலான வடவர்கள் பட்டாசுகளுக்குத் தடை போட்டிருக்கிறார்கள். ‘வடவர்கள்கள் நம்மவர்களும் அல்ல; நல்லவர்களும் அல்ல’ என்று அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்!=
|