Hot Kisu kisu



பெருத்து, இளைத்து ஷூட்டிங்!

பி சென்டர், சி சென்டருக்குக் கூட தெரிந்த நடிகையாக இருந்தும் உடம்பு பெருத்ததால், பிரேக் விட்டார். அதன்பிறகு அனுஷ்கா மாதிரி உடம்பை குறைத்துவிட்டு, சாதி கதையில் காலத்தை ஓட்டும் இயக்குநருக்கு போன் செய்து சான்ஸ் கேட்டார். இருவருக்கும் யோகம் கூடி வந்ததில், நடிகையை தனது அடுத்த புராஜெக்ட்டில் கமிட் செய்து ஷூட்டிங்கும் கிளம்பிவிட்டார் இயக்குநர்.

இமயம் செய்த திருட்டு!

லாக்டவுனில் படப்பிடிப்புக்கு தடை இருந்தது. அப்போதும் யூனிட்டோடு கிளம்பிப் போய் கமுக்கமாக படப்பிடிப்பை சில இயக்குநர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்படி நடந்த திருட்டுத்தனமான ஷூட்டிங்கில் இமய இயக்குநர் நடித்த படமும் ஒன்று.
ஊர் பிரச்னைக்கெல்லாம் அறிக்கைவிடும் அவர், இந்த அநீதிக்கு துணை போனது ஏன் என கோலிவுட்டில் கேட்கிறார்கள்.

மார்க்கெட் இல்லை... சுரண்டல் உண்டு!

இப்போதும் மார்க்கெட் இல்லை. ஆனால், பெயர் சொன்னால் பளிச்சென்று தெரியும் நடிகைதான். ஹீரோயின் சப்ஜெக்ட்களை பண்ண நினைக்கும் அவரது பேமெண்ட் கோடிக்கு கொஞ்சம்தான் குறைவு என அதிரவைக்கிறார்கள். தயாரிப்பில் விபரம் தெரியாதவர்கள் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து கமிட் செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஆட்களைத்தான் ஹீரோயினும் எதிர்பார்க்கிறாராம்.

போதை தோழிகள்!

இணைந்து நடித்ததில்லை என்றாலும் கூட ‘ஷி’யும் ‘ஸ்’ஸும் தோழிகள். இருவருமே போதை பழக்கத்திற்கு அடிமையாகி, எப்போதும் மிதக்கிறார்களாம். பட வாய்ப்புகள் வந்தால் கூட, ‘விளம்பர ஷூட் இருந்தா சொல்லுங்க... படம்னா ஆறு மாசம் வரை ஒரே படத்துக்காக ஓட முடியாது’ என்கிறார்களாம். ஆனாலும், அவர்களின் போட்டோஷூட்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை! இன்ஸ்டா சிதறித் தெறிக்கிறது.