யூனா!



விடிவதற்கு இன்னும் 8 மணிநேரம் இருக்கிறது. அதற்குள் எனக்குத் தேவை 10 லட்சம் ரூபாய். இப்போது என் பாக்கெட்டில் இருப்பது 120 ரூபாயும், கொஞ்சம் சில்லரைக் காசுகளும், இரண்டு விக்ஸ் மிட்டாய்களும். காலைக்குள் பணம் தயார் செய்யாவிட்டால் எனது தலை என்னுடையதில்லை.
எனக்கெதிரே இருந்த கடலை விடவும் அதிகமாக மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது.ஒரு மிட்டாயைப் பிரித்துப் போட்டுக் கொண்டு கடற்கரை ஈர மணலில் கர்ச்சீஃப் விரித்து அமர்ந்தேன். புத்திசாலியாக வாழ்வதைக் காட்டிலுமான முட்டாள்தனம் இந்தக்காலத்தில் வேறெதுவும் இருக்கமுடியாது.

பொறியியல் படிக்கும்போது, எனது நண்பர்கள் என்னை முட்டாள் என்பார்கள். வகுப்பு முடிந்ததும் வாழ்வியல் கூறுகளை அவர்கள் பிரித்து மேய்ந்துகொண்டிருந்த வேளைகளில், நான் லேபரட்டரிக்குள் பெட்ரோலிய மூலக்கூறுகளைப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருந்தவன். ஆராய்ச்சி... ஆராய்ச்சி... என்று வாழ்க்கையை இழந்துவிட்டேனோ என்று இப்போது தோன்றுகிறது.

விடிந்ததும் வந்துவிடுவான் ஒன்றியம் பெருமாள். ‘‘என்னா தாசு... ரெடியா என்னோட காசு?’’ துளி இரக்கமின்றி தோளில் கைவைத்து கேட்பான். இல்லை என்று தெரிந்தால் தொலைந்தது. ‘‘நீ தயாரிக்கிற பெட்ரோலை உம்மேலயே ஊத்திக் கொளுத்திடுவேன்... ஆமா!’’ என்று முன்பொரு முறை மிரட்டியிருக்கிறான். நிஜமாகவே செய்யக் கூடியவன். ஈவு, இரக்கமற்றவன். இவனுக்கு பேய் பெட்டர். அது கூட பெண் என்றால் இரங்குமாம். ச்சே... இவனிடம் சிக்கிச் சீரழிவதற்கு, பேயிடம் அறை வாங்கிச் சாகலாம்!

யாரோ தோளைத் தட்டுவது போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. கடல் காற்று. பத்து லட்சத்துக்கு என்ன செய்யலாம்... யோசித்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் தோளைத் தட்டுவது போல - இம்முறை சற்று அழுத்தமாகவே - உணர்ந்தேன்.

மணலைத் தட்டிவிட்டு எழுந்து சுற்றிலும் பார்த்தேன். என்னையும், மங்கலான எனது நிழலையும் தவிர யாருமில்லை. சாதாரண ஆளாக இருந்திருந்தால் பேய் பயம் வந்திருக்கும். எனக்கு அந்த பயம் இல்லை. காரணம், பேய் பிசாசுகளிடம் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை.

யோசித்தபடியே கடற்கரையில் இருந்து எழுந்து மெதுவாக நடந்தபோது, அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். தெளிவாக உணர்ந்தேன். எனது இடது
தோளில் யாரோ கை வைக்கிறார்கள். ‘யாரது...?’ தோளை உதறி, உயர்த்தியதும், அந்தக் கை விருட்டென அகன்றது.

விறுவிறுவென்று நடந்தவன் சட்டென்று நின்றேன். எனது இடதுதோளை உரசியபடி யாரோ கூடவே நடந்து வருவதை உணரமுடிந்தது. மனதுக்குள் சூடாக ரத்தம் பாய்ந்தது. பேயாக இருக்குமோ... சந்தேகத்தின் பலனை பகுத்தறிவுக்கு எதிராகத் திருப்பியது மூளை. ‘ச்சேச்சே... இருக்காது. பேயாவது... பூதமாவது...’ என்னை நானே தைரியப்படுத்திக்கொண்டு இடது தோள் பக்கம் திரும்பியபோது, சூடான காற்று... மூச்சுக்காற்று எனது முகத்தில் மோதியது.

கால்களுக்குக் கீழே கடற்கரை எனக்கு ஆடியது. அந்த இடத்தில் என்னையும், நிழலையும் தவிர (அதுவும், என்னுடையதுதானா என்று இப்போது நிச்சயமாகத் தெரியவில்லை) யாருமில்லை. எனக்கு பக்கத்தில் யாரோ நிற்கிறார்கள் என்று உறுதியாக இப்போது உணரமுடிந்தது.
தொண்டையை லேசாக கரகரத்துக்கொண்டு மெதுவாகக் கேட்டேன்... ‘‘யார் நீங்க?’’ எந்த பதிலும் இல்லை. ‘‘யார் நீங்க? ப்ளீஸ்... நானே நிறைய பிரச்னைல இருக்கேன். நீங்க யாரு...?’’

சில நொடி மவுனத்துக்குப் பிறகு, மிக, மிக மென்மையான குரல், லேசான கரகரப்புடன் எனக்கெதிரே இருந்து வந்தது. ‘‘நான்... யூனா...’’
கால்கள் கிடுகிடுத்து கீழே சாயப்போனவன், சுதாரித்து கடற்கரை மணலில் தொப்பென்று கை ஊன்றி உட்கார்ந்தேன். ‘மனிதர்களையே சமாளிக்க முடியலை... இதுல பேயும் சேர்ந்து அட்டாக் பண்ணினா என் கதி என்னாகிறது?’

‘‘இங்க பாருங்க... நான் பெரிய பிரச்னைல இருக்கேன்...’’‘‘நானும் பெரிய பிரச்னைல இருக்கேன் தாஸ்...’’ எனக்கெதிரே அந்த மென் குரல், எனது பெயர் சொல்லி இப்போது கரகரப்பின்றி பேசியது.‘‘எனக்கு உதவி பண்ண இந்த உலகத்தில யாரும் இல்லை. தயவு செஞ்சி என்னை விட்டுருங்க...’’
‘‘எனக்கும் உதவி செய்ய யாரும் இல்லை தாஸ். நீதான் தஸ்கிடே... ஸாரி... உதவி பண்ணணும்...’’ மறுபடியும் குரல் எக்கோ அடித்தது.
‘‘அதென்ன... தஸ்கிடே?’’‘‘தஸ்கிடேனா, ஜப்பான் மொழியில் உதவி...’’
‘‘என்ன தஸ்கிடே... ச்சே... என்ன உதவி பண்ணணும்?’’

‘‘என்னோட உடம்பைத் தோண்டி எடுக்கணும். எடுத்து, அதை எரிக்கணும்...’’நான் கிறுகிறுத்து கீழே சாய்ந்தேன். சில நிமிடங்கள் கழித்து கண்விழித்தபோது, கடற்கரை குளிர்காற்றைக் கடந்தும் உடல் வியர்த்தது. இதென்ன புதுத் துயரம்? ஜப்பான் மொழி தெரிந்த பேயா இது? இதனிடம் இருந்து எப்படி தப்பிப்பது? செயற்கையாக கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு கோபமாகப் பேசினேன்... ‘‘என்னைப் பார்த்தா எப்படித் தோணுது? உங்க கேலி விளையாட்டுக்கு நான் ஆள் இல்லை. தலைக்கு மேல எனக்கு பிரச்னை. இந்த நேரத்தில பேய் பிரச்னையும் சேர்ந்தா என்னால சமாளிக்க முடியாது...’’

‘‘நான் பேய் கிடையாது தாஸ்...’’
‘‘அப்ப ஹூ ஆர் யூ?’’

‘‘உன்னை மாதிரிதான் நானும். நீ தமிழ் பேசும் இந்தியன். நான் ஜாப்பனீஸ் பேசும் ஜப்பான் பொண்ணு. என்னோட பேரு யூனா இஷிஹரா. போன ஆகஸ்ட்ல வயசு 19 முடிஞ்சு 20 ஆகுது...’’‘‘19 முடிஞ்சு இருபதா...?’’ ஒரு நிமிடம் தடுமாறி, ‘‘நீங்க யாரா வேணா இருங்க யூனா. என்கிட்ட வேண்டாம். நான் பெரிய சிக்கல்ல இருக்கேன். உங்களுக்குத் தெரியாது. நாளைக்கு விடிஞ்சா என்னோட நிலைமை வேற...’’ என்றேன்.

‘‘உன் பிரச்னை தெரியும் தாஸ். உனக்குத் தேவை பணம்தானே?’’
‘‘ஆமா!’’‘‘அதை நான் கொடுத்தா, பதிலுக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்வியா?’’
எனக்கெதிரே பேசுவது யார் என்றே தெரியவில்லை. 20 வயது ஜப்பான் இளம்பெண் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் இந்த மர்மக்குரலை எப்படி நம்புவது?‘‘ஹலோ மேடம் ஜப்பான். உங்களை எப்படி நான் நம்புறது? நீங்க யாரு? என்னோட பிரச்னையை நானே பார்த்துக்கிறேன். ஜப்பான்காரங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு படிச்சிருக்கேன். என்னைய விட்டுருங்களேன்...’’
எனக்கெதிரே மெல்லிய ஜப்பானிய சிரிப்பு கேட்டது. ‘‘நிச்சயமா என்னை நம்பலாம் தாஸ்!’’

‘‘ஒரு பேயை நம்புற அளவுக்கு நிலை மோசமாகிடுச்சே...’’ சொல்லி முடிப்பதற்குள்... ‘‘ஒரோகா...’’ என் கன்னத்தில் பளாரென்று ஒரு அடி விழுந்தது.
கன்னத்தைத் தடவியபடியே ‘‘அதென்ன ஒரோகா?’’ என்றேன்.

‘‘ஜப்பான் மொழியில் முட்டாள்...’’
‘‘உண்மைதான். புத்திசாலின்னு நினைச்சுக்கிட்டிருக்கிற முட்டாள் நான்...’’ என் குரலில் எதிரொலித்த வேதனை, எதிரே இருந்த ஜப்பான் கோஸ்ட் மனதை நெகிழச் செய்திருக்கவேண்டும்.‘‘தாஸ் ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ. நான் பேய் இல்லை. சாதாரண மனுஷி. உனக்கு கெடுதல் பண்றதுக்காக வரலை. நான் உன்னை ரொம்ப நாளா கவனிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு உன்னால ஒரு உதவி ஆகணும். அதை செஞ்சு கொடுத்தா, பதிலுக்கு நான் உன்னோட பணப்பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன்...’’

‘‘எனக்கு நிஜமாவே புரியலை ஜப்பான். நீ பேய் இல்லை. சரி. அப்படினா உன்னை ஏன் என்னால பார்க்க முடி
யலை? உன்னோட உடம்பைத் தோண்டி எடுத்து எரிக்கணும்னு சொல்ற. வொய்? அப்படினா நீ பேய்தானே?’’
‘‘பொறு. புரியிற மாதிரி சொல்றேன். அது பெரிய கதை. உலகப்போர் கதை...’’

‘‘அய்யய்யோ... போர்க் கதை வேண்டாம். போர் அடிக்கும். எனக்கு நேரமும் இல்லை. ஃப்ளாஷ்பேக்கை சுருக்கமா முடி...’’
‘‘தாஸ், என்னோட அப்பா தஷிரோ மட்சுடா. எங்க ஊர் நாகசாகி பக்கத்துல இருக்கிற ஒமுரா. எங்க அப்பா 1915ல ஜப்பான் ஆர்மில ஆயுத
விஞ்ஞானியா இருந்தார். அது முதல் உலகப்போர் மும்முரமா நடந்துக்கிட்டிருந்த நேரம். போர்ல எங்க ஆர்மிக்காரங்க நிறையப் பேர்
இறந்துக்கிட்டிருந்தாங்க. அதனால, அப்பாவும், அவரோட மிலிட்டரி டாக்டர் ஃப்ரெண்டும் சேர்ந்து ஒரு புது ஆராய்ச்சில இறங்கினாங்க...’’
‘‘ஆராய்ச்சியா...? என்ன ஆராய்ச்சி?’’

‘‘சொல்றேன். மனிதனோட
ஜீன்களில் மாற்றம் செஞ்சு, அவனோட மரணத்தைத் தள்ளிப்போட்டு, நீண்ட
காலம் வாழ வைக்கிற மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி...’’
‘‘சாகாவரம் கொடுக்கிற
மருந்தா? இதெல்லாம் நம்புற
மாதிரியா இருக்கு?’’

‘‘நீ கேட்கறது கரெக்ட். அந்த நேரத்தில இவங்க ஆராய்ச்சியை யாரும் நம்பலை. அதனால, வெளியே யாருக்கும் தெரியாம, ரொம்ப ரகசியமா அந்த ஆராய்ச்சியை செஞ்சாங்க. ஆனா, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலை. கொஞ்சநாள்ல அந்த டாக்டரும் இறந்துட்டார்...’’
‘‘அடப்பாவமே! அப்றம் என்ன ஆச்சு?’’‘‘1939ல இரண்டாம் உலகப்போர் வந்த சமயம். இந்தத் தடவை, அப்பா மட்டும் அந்த மருந்து கண்டுபிடிக்கிற ஆராய்ச்சியை ஆரம்பிச்சாரு. அப்ப நான் மருத்துவ மாணவி. அப்பாவோட ஆராய்ச்சில நானும் சேர்ந்துக்கிட்டேன். ரெண்டு பேரும் லேபரட்டரியே கதியா கிடந்தோம்...’’
‘‘இன்ட்ரஸ்ட்டிங்.

கண்டுபுடிச்சிட்டிங்களா?’’

‘‘பொறு. அந்த டைம்ல ஜப்பான் ஆர்மி, பர்மாவை பிடிச்சிட்டாங்க. அடுத்த இலக்கா, இந்தியாவைத் தாக்குறதுக்கு திட்டம் போட்டாங்க. அந்த திட்டத்தை வெற்றிகரமா செயல்படுத்துறதுக்காக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை படு ரகசியமா கடல் வழியாக இந்தியா அனுப்பி வைச்சாங்க.
அந்தக் குழுவுல, வெப்பன் கன்ட்ரோல் ஆபீசரா எங்க அப்பாவும் இந்தியா வந்தாரு.

அவர் கூட சேர்ந்து நானும் வந்தேன். 1942ல, உங்க மெட்ராஸ்... அதான், சென்னைக்கு வந்தோம். இந்த எண்ணூர்லதான் அப்ப எங்க ரகசிய முகாமை அமைச்சோம். அங்கயும் அப்பாவோட ஆராய்ச்சி படு தீவிரமா தொடர்ந்திச்சு. கடைசியா ஒரு நாள்... அவரோட அயராத உழைப்புக்கு பலன் கிடைச்சது...’

கீர்த்தி சுரேஷ்

கடந்த இரண்டு வருடங்களாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். செல்லத்துக்கு ‘நைக்’ என
பெயரிட்டு மகிழும் கீர்த்தி, இந்த லாக்டவுனில் வீட்டில் இருந்ததால், அதன் பாசமழையில் நனைந்து எமோஷனலாகி விட்டார்.
இப்போது படப்பிடிப்புக்கு கிளம்பினால், கீர்த்திக்கு முன்னாடியே, நைக் காரில் ஏறி அமர்ந்து கொள்கிறதாம்.

சமந்தா

தமிழில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் சமந்தா.
அதன் ஷூட் அடுத்த ஆண்டில்தான் துவங்குகிறதாம். இது தவிர, தெலுங்கிலும், தமிழிலும் தலா ஒரு கதையை ஓகே செய்து வைத்துள்ளார். அதில் ஒன்று ஹீரோயின் சென்ட்ரிக் சப்ஜெக்ட்.

தமன்னா

சினிமாவில் பரபரப்பாக ஓடிய காலத்தில் ஆன்லைனில் தங்கம் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார் தமன்னா. அதை அவரது அப்பா கவனித்து வந்தார். எதிர்பார்த்த வருமானம் கிட்டாததாலும் சில சிக்கல்களாலும் சென்ற ஆண்டு அதற்கு மூடுவிழா நடத்தினார்கள்.

இப்போது மீண்டும் அந்த ஆன்லைன் நகைக்கடையை திறக்கலாமா அல்லது காஜல் அகர்வால் போல மும்பையில் கடை திறக்கலாமா என யோசித்து வருகிறார் தமன்னா.

திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்’

அடுத்த இதழில்...