விக்டோரியா அருவி வறண்டுவிட்டது!



உலகின் ஒப்பற்ற நீர்வீழ்ச்சி விக்டோரியா. ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது இந்த அருவி. ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வேக்கு இடையில் அமைந்து ஆப்பிரிக்காவின் அடையாளமாகவே மாறிவிட்டது விக்டோரியா. 108 மீட்டர் உயரத்தில் கொட்டுகின்ற நீரின் ஒலி இடிமுழக்கத்தைப் போல இருக்கும்.

அகலமாக பரந்திருக்கும் இந்த அருவியில் கொட்டுகிற நீரைப் பார்க்கும்போது பனி மூட்டம் போல காட்சியளிக்கும். ஆனால், இன்றோ விக்டோரியா வறண்டு கிடக்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உண்டான வறட்சியால் விக்டோரியா வறண்டுவிட்டதாக சொல்கிறார்கள். கடந்த நூறாண்டுகளில் நிகழ்ந்த மோசமான வறட்சியாக இது கருதப்படுகிறது. இத்தனைக்கும் ஒரு மாதத்துக்கு முன்பு வளமாக இருந்தது விக்டோரியா!

த.சக்திவேல்