நியூ!



ஆண் - பெண் பாகுபாடின்றி சமூகமே பாலியல் வறட்சியில் திண்டாடும்போது ஆபாச வீடியோ பார்த்தான், ஆடியோவைக் கேட்டான் என்று குற்றவாளியாக்குவது நம் தலையிலேயே மண்ணை வாரிப்போடும் செயல் என்ற உளவியல் மருத்துவர் சஃபியின் வார்த்தைகள் ஆணித்தரமான உண்மை.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; கருணாகரன், போரூர்; கதிரவன், மதுரை; ப.மூர்த்தி, பெங்களூரு; மனோகரன், கோவை.

‘டேட்டா கார்னர்’ மிக முக்கியமான தகவல்களைத் தாங்கி வருகிறது.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்;  மியாவ்சின், கே.கே.நகர்; பப்பு, அசோக் நகர்.

தொல்(லைக்) காப்பியத்தில் சுடப்படும் வடைகள் நன்றாகவே கடை விரிக்கப்படுகின்றன.
- ஆர்.ஜெ.சி, சென்னை; கீதா, கோவில்பட்டி; பிரேமா பாபு, சென்னை; ஆசை. மணிமாறன், திருவண்ணாமலை; சரண் சுதாகர், வேளச்சேரி.

ஆப்பிளின் தரத்தை மேன்மைப்படுத்த 70 கோடி வரை செலவு செய்துள்ள அமெரிக்கா, அந்தப் பணத்தை நம் தலையில் (விலையில்) ஏற்றாமல் இருந்தால் சரி.
- இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா பாபு, சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதி இப்படிப்பட்ட  சந்தான பாக்கியம் பெற்றுவிட்டாரே என்று வியக்குமளவுக்கு பெயரெடுத்துவிட்டார் அவரது மகன் சஞ்சய் பாரதி.
- ஜெர்லின்,ஆலந்தூர்; கவுரிநாத், பரங்கிமலை; முகம்மது உஸ்மான், மூலக்கடை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; கலிவரதன், கீழ்க்கட்டளை.

சினிமாவில் தன்னை அடையாளப்படுத்தியவர்களை நன்றியோடு வாசகர்களுக்கு அறிவிக்கிற ‘தம்பி’ கார்த்திக்கு வாழ்வில் நிறைய கீர்த்தி காத்துள்ளது.
- சந்திரமதி, சென்னை; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; கே.வேலு, உள்ளகரம்; பிரேம் குமார், மறைமலைநகர்; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

‘நியூஸ் சாண்ட்விச்’சின் எல்லா தகவல்களுமே ‘நியூ’வாக இருந்தன.
- அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; கணேசன், மூவரசம்பட்டு; பிரேம்குமார், சைதாப்பேட்டை.

வாசகர் கடிதம் பகுதியில் நான் எழுதிய கடிதத்தை பிரசுரித்து கூடவே மேலும் சில வாசகர்களின் பெயர்களையும் சேர்த்து விடுகிறீர்கள்.  ஒரு குழந்தைக்கு நான்கு தகப்பன்போல ஒரு கடிதத்தை நாலைந்து பேர் எழுதியது போல பிரசுரிக்கிற முறை சரியானதாகத் தெரியவில்லை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

(தங்கள் ஆதங்கம் புரிகிறது. அதேநேரம் ஒரே கட்டுரை குறித்து பலரும் கடிதம் எழுதும்போது அவர்கள் அனைவரையும் மதித்து அவர்களது பெயர்களையும் ரீடர்ஸ் மெயிலில் குறிப்பிடுவதுதானே முறை! புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம் - ஆசிரியர்)

ரீடர்ஸ் வாய்ஸ்