பட்டாஸ் பொண்ணு!



பூத்துக் குலுங்கும் அவுட்ஃபிட்டில், புது வருஷத்தை வரவேற்கிறார் மெஹ்ரின் பிர்ஸாடா. டோலிவுட்டின் மாடர்ன் doll, தமிழில் இதற்கு முன் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’ என ஜொலித்தவர். இப்போது தனுஷின் ‘பட்டாஸ்’ ஆக பளபளக்கிறார். சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘‘எப்படி இருக்கீங்க..?’’ என கேட்டு கொஞ்சும் தமிழில் சிணுங்குகிறார் மெஹ்ரின்.  

‘‘ஆக்சுவலா, தமிழ்ல கொஞ்சம் வேர்ட்ஸ்தான் தெரியும். ‘நல்லா இருக்கீங்களா?’, ‘ஆமா’, ‘சாப்டீங்களா’ இப்படி சில வார்த்தைகள்தான் தெரியும். தெலுங்கிலும் அதே மீட்டர்தான். அங்கேயும் இன்னும் சரளமா பேச வரல. ஆனா, பேசிடுவேன். கோலிவுட்ல நல்ல படங்கள் பண்ணணும் என்பது ரொம்ப நாள் கனவு. மறுபடியும் தமிழ் சினிமா அமைஞ்சது ஹேப்பியா இருக்கு. அதுவும் தனுஷ் சாரோட ‘பட்டாஸ்’ கிடைச்சிருக்கு.

அவரோட படங்கள் நிறைய பார்த்திருக்கேன். சமீபத்துல ‘மாரி 2’ பார்த்தேன். ‘ரவுடி பேபி...’ ஸாங், என்னோட ஃபேவரிட் ஆகிடுச்சு. ‘பட்டாஸ்’ ஸ்பாட்டுல தனுஷ் சார்கிட்ட அவரோட ‘மாரி’ மேனரிசமான ‘செஞ்சுருவேன்’ மாதிரி செய்து காட்டுவேன். ‘அப்படி இல்லம்மா... இப்படி’னு அவர் கலாய்ப்பார்...’’ கலகலக்கிறார் மெஹ்ரின்.உங்க ஹிஸ்ட்ரி சொல்லுங்க..?

நோட் பண்ணிக்குங்க. பூர்வீகம் பஞ்சாபி. ஆனா, வளர்ந்ததெல்லாம் கனடால. என் ஃபேமிலில யாருக்கும் சினிமா பேக்ரவுண்ட் கிடையாது. ‘நடிக்க வருவேன். தமிழ்ல நடிப்பேன்’னு நினைச்சதே இல்ல. கனடால இருக்கிறப்ப மாடலிங் ஆஃபர் வந்துச்சு. ரேம்ப் வாக், பியூட்டி வாக்னு பறந்தேன். அழகிப் போட்டில பட்டமும் கிடைச்சிருக்கு.

அப்படித்தான் தெலுங்கில் அறிமுகமானேன். என் முதல் படம் ‘கிருஷ்ண காடி வீர பிரேம கதா’ சூப்பர் ஹிட். ரெண்டாவது படமே தமிழ்ல தேடி வந்துச்சு. ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சுசீந்திரன் சார் படம். ஆனா, அந்த படம் கிடைக்கறதுக்கு முன்னாடியே தமிழுக்கும் எனக்கும் ஒரு கனெக்‌ஷன் ஏற்பட்டிருந்தது.

விஷாலோட ‘தம்ஸ் அப்’ விளம்பரப் படத்துல நடிக்கும்போது, ‘ஒரு தமிழ் ஹீரோவோட நடிக்கறேன்’னு தோணுச்சு. அப்புறம், தெலுங்கில் ‘ராஜா தி கிரேட்’ல ராதிகா மேம் காம்பினேஷன்ல நடிச்சேன். அவங்க மூலமாகவும் கோலிவுட் பத்தி தெரிஞ்சிருக்கேன். இப்படி ஒரு பந்தம் அமைஞ்சதால கோலிவுட் என் ஹோம் டவுன்னு தோண ஆரம்பிச்சுடுச்சு. சென்னைல முதல் மீடியா மீட்ல கூட ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’னு தமிழ்ல பேசினேன்!

நடிகையான பிறகு உங்க வீட்ல எப்படி பாக்கறாங்க?
குட் க்வொஸ்டீன். அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே சவுத் இண்டியன் லாங்குவேஜ் தெரியாது. ஆனா, நான் நடிக்கற படங்கள எல்லாம் தியேட்டர்ல போய் பார்க்கறாங்க. ‘நல்லா இருக்கு’ன்னு ஹேப்பியா சொல்வாங்க.ஷூட்டிங் பிரேக்ல என்ன பண்ணுவீங்க?

புக்ஸ் படிப்பேன். ஹேண்ட் பேக்ல எப்பவும் ஓர் ஆங்கிலப் புத்தகம் கூடவே இருக்கும். இப்ப Michael Schulman எழுதின ‘Her again: Becoming Meryl Streep’ புத்தகத்தை வாசிச்சிட்டிருக்கேன். 19 ஆஸ்கார் நாமினேஷன் ஆனவங்க. மூணு ஆஸ்கார் வாங்கின அயர்ன் லேடி அவங்க! இன்ட்ரஸ்டிங் புக்.l

மை.பாரதிராஜா

கிரன்ஷா