Data Corner



*தென் ஆப்பிரிக்காவின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசில் இருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள 14,334 மைல்களே மனிதன் அதிகபட்சமாக நடந்து செல்லக்கூடிய தூரம்.

*d2018 - 19ம் ஆண்டில் மொத்தம் 3.19 லட்சம் டன் அளவிலான காபியை இந்தியா உற்பத்தி செய்துள்ளது.

*கடந்த ஆண்டு மூன்று வடிவிலான சர்வதேச போட்டியையும் சேர்த்து மொத்தம் 2,442 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, சனத் ஜெயசூர்யாவின் (1997ம் ஆண்டில் 2,387 ரன்) 22 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

*இணைய பரிமாற்றத்தில் 30 சதவீதம் ஆபாச வலைத்தளங்களே ஆக்கிரமித்துள்ளன.

*சௌபாக்கியா திட்டத்தின்கீழ், ரூ.143 கோடி எல்ஈடி பல்புகள் வழங்கியதன் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது.

*இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக உள்ளது.

*இந்தியாவில் 33% அதிகரித்துள்ள புலிகள் எண்ணிக்கையில், தமிழகத்தில் 264 புலிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னம் அரசு