சூப்பர் மார்க்கெட்டில் வறுத்த பூச்சிகள்!
தமிழ்நாட்டுக்குள் சூப்பர் மார்க்கெட் கலாசாரம் கால்பதித்து அதிகபட்சம் முப்பது வருடங்கள் இருக்கலாம். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் 150 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சூப்பர் மார்க்கெட் வணிகம் கொடிகட்டிப் பறந்து வருகிறது.
உலகின் பழமையான மற்றும் இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனம் ‘செய்ன்பரி’ஸ்’. கடல் போல பரந்து விரிந்திருக்கும் இந்நிறுவனத்தின் கிளைகள் 1,500ஐ நெருங்கிவிட்டன. சுமார் 2 லட்சம் பேர் இதில் வேலை செய்கின்றனர். இங்கே கிடைக்காத பொருட்களே இல்லை. 2019ன் ஸ்பெஷலாக வறுத்த பூச்சிகளையும் நொறுக்குத் தீனியாக விற்கத் தொடங்கியுள்ளது ‘செய்ன்பரி’ஸ்!மக்களும் ஆர்வத்துடன் பூச்சிகளை வாங்கிச் செல்வதுதான் இதில் ஹைலைட். உலகில் இருபது லட்சத்துக்கும் அதிகமானோர் பூச்சிகளை உணவாக உண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|