விருந்து!



‘நியூஸ் சாண்ட்விச்’ செய்திகள் ஐம்புலன்களுக்கும் விருந்து வைத்து மனதை மகிழச்செய்கின்றன.
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி; இலக்சித், மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; பிரேமா, சென்னை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வாரந்தோறும் தொல்(லைக்) காப்பியம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது. நாட்டு நடப்பைச் சிந்திக்கத் தூண்டுகிறது. உதாரணத்துக்கு இட்லி இயக்குனர், ஆண்டி இந்தியன் மற்றும் யூனிஃபார்ம் சொல்லும் கதைகள்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சந்திரமதி, சென்னை; கருணாகரன், போரூர்; மியாவ்சின், கே.கே.நகர்; பப்பு, அசோக்நகர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி.

விண்வெளியில் தயாராகும் பிஸ்கட்டா... அடேயப்பா! போகிற போக்கைப் பார்த்தால் விண்வெளியில் வீடுகட்டி வாடகைக்கு விடுவார்கள் போலிருக்கிறதே.
- ஜெர்லின், ஆலந்தூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; கவுரிநாத், பரங்கிமலை; மனோகரன், மேட்டுப்பாளையம்; ப.மூர்த்தி, பெங்களூரு; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

இனவெறியையும் வறுமையையும் தாண்டி தனக்கென அடையாளத்தை உண்டாக்கி தலைநிமிர்ந்து பாலே நடனத்தில் கொடிகட்டிப் பறக்கும் பிரீஷியஸ் ஆடம்ஸ் ஒரு ‘பிரிஷியஸ்’.
- பிரேமா குரு, சென்னை; எஸ்.சண்முகம், திருவண்ணாமலை; எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி; நடராஜன், திருநெல்வேலி; சரண் சுதாகர், வேளச்சேரி.

‘இது வெறித்தனமான ஜெனரேஷன்’ என்று சொல்லும் துருவ்வின் துறு துறு பேட்டியில் திரையுலகில் நல்லா நடிச்சு சாதிக்கணும்ங்கிற வெறித்தனம் பளிச்சிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; கலிவரதன், கீழ்க்கட்டளை; நிலவழகு, நீலாங்கரை; கீதா, கோவில்பட்டி; ரவி, பொள்ளாச்சி.

சோனாலி பிரதீப்பின் அழகின் ரகசியம், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் விஷயம் இதயத்தை ‘டச்’ செய்துவிட்டன.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; கோவிந்தராஜ், தில்லை கங்காநகர்; முரளி, நங்கநல்லூர்; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; பவித்ரா, சென்னை; சந்திரா, வேளச்சேரி; ரா.புனிதவதி, பொள்ளாச்சி.

சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர் வானதியின் ஊக்கமும் உழைப்பும் உன்னதம். உலகுக்கே ஓர் எடுத்துக்காட்டு.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேமா குரு, சென்னை; பிரீத்தி, செங்கல்பட்டு; த.சத்தியநாராயணன், அயன்புரம்; மனோகரன், மேட்டுப்
பாளையம்; பிரேமா, சென்னை.

நடிப்பு, குடும்பம், தொழில் என்று முழு பவுர்ணமியாய் ஜொலிக்கிற பூர்ணிமாவின் உழைப்பு கொஞ்சம் நஞ்சமல்ல என்பதை அறிய மலைப்பாக உள்ளது.
- ஜெர்லின், ஆலந்தூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; கணேசன், சென்னை.

‘கலவரக்குழி’ சிறுகதையின் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் அருமை. பாராட்டுகள்.
- இராஜேஸ்வரி, போடிநாயக்கனூர்.

ரீடர்ஸ் வாய்ஸ்