COFFEE TABLE



டான்ஸ் பஜ்வா!

இன்ஸ்டாவில் 15 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்தாலும், வெறும் 355 பேரைத்தான் ஃபாலோ செய்கிறார் பூனம் பஜ்வா. சமீபத்தில் மும்பையில் தனது தோழியுடன் டான்ஸ் ப்ராக்டீஸ் செய்திருக்கிறார். அந்த அழகு தருணத்தை வீடியோவாக்கி இன்ஸ்டாவில் தட்டிவிட, லைக்குகள் குவிகின்றன.

ஹோம் ஆட்டோ!

கம்ப்யூட்டர், மொபைல் போன் சார்ஜர், வாஷ் பேசின், ஹேண்ட் வாஷ் என சொல்லும்போதே ஏதாவது ஹோட்டல் அறை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது மும்பையில் ஓடும் ஆட்டோ! அதுவும் முதல் ஹோம் ஆட்டோ. வீட்டில் இருக்கும் உணர்வை வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஹோம் ஆட்டோவை வடிவமைத்திருக்கிறார் சத்யவான். இந்த ஆட்டோதான் இப்போது செம வைரல். இதுபோக முதியவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது சத்யவானின் கொள்கை.

மிரட்டும் ‘மீ’ வாட்ச்

ஆப்பிள் வாட்ச்சுகளுக்குப் போட்டியாக களமிறங்கியிருக்கிறது ‘மீ’ வாட்ச். ஸ்டைலிஷான இதன் வடிவமைப்பு மிரட்டுகிறது. தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், இதயத்துடிப்பின் அளவு, உணவில் உள்ள கலோரிகளின் அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், தூங்கும் நேரம், உடலின் எனர்ஜி, உடற்பயிற்சி செய்யும் நேரம் போன்ற தேவையான ஃபிட்னஸ் டிராக்கர்கள் மட்டுமே இதில் உள்ளன. ஸ்டெயின்லெஸ் மற்றும் ரெகுலர் சிலிக்கான் ஸ்டிராப்களிலும் கிடைக்கிறது. விலை ரூ.13 ஆயிரத்திலிருந்து ஆரம்பம்.

சிரிங்க பாஸ்

‘‘சிரியுங்கள்... அது போலியாக இருந்தாலும் பரவாயில்லை. சிரிப்பு, மூளைக்கு மகிழ்ச்சியை ஊட்டுகிறது...’’ என்று உற்சாகமளிக்கிறது சமீபத்திய ஆய்வு.
‘‘ஆயிரக்கணக்கான ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு விஷயம் வெளிப்பட்டிருக்கிறது. உங்களின் சூழல் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் கூட வெறுமனே சிரியுங்கள்.

அந்தச் சிரிப்பின் போது முகத்தில் நிகழ்கின்ற அதிர்வுகள் நேர்மறையான சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்புகின்றன. அது சிரிப்புக்கு முன்பு இருந்த மனநிலையைவிட சிறந்ததாக இருக்கிறது...’’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவரான சாகர்.மட்டுமல்ல, உங்களின் மனநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது சிரிப்பு.

பாலக் டோலக்!

மாடலும், டோலிவுட் ஹீரோயினுமான பாலக் லால்வானி, ‘குப்பத்து ராஜா’விற்குப் பிறகு ‘சினம்’ படத்தில் பரபரக்கிறார். உத்திரப்பிரதேச லட்டுவான பாலக்கின் அப்பா, பாலிவுட் நடிகர் என்பது ஹைலைட். முன்பெல்லாம் டுவிட்டர் டோலக்காக மினுங்கும் பாலக்கை, இப்போது இன்ஸ்டாவில்தான் பார்க்க முடிகிறது.