தீவே கப்பலாக..!சொர்க்கத்தை பூமியில் கொண்டு வரும் முயற்சி இது!இங்கிலாந்தைச் சேர்ந்த ‘யாட் ஐலண்ட் டிசைன்’ என்ற நிறுவனம் ரூ.400 கோடி செலவில் ‘ட்ராபிக்கல் ஐலேண்ட் பாரடைஸ்’ என்ற மெகா சொகுசுக் கப்பலை உருவாக்கி வருகிறது.
அதாவது ஒரு தீவையே கப்பல் வடிவில் கொண்டு வரப்போகின்றனர்! எட்டு வருடங்களுக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்ட இத்திட்டம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து வருகிறது.

கப்பலின் மேல்தளத்தில் சிறு சிறு குடில்கள், செயற்கை நீர்வீழ்ச்சிகள், மலைக்குன்றுகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் என மக்களின் மனதைப் பரவசப்படுத்தும் அனைத்து அம்சங்களும் உள்ளன. இது போக ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான வசதியும் உண்டு!

த.சக்திவேல்