உலகின் முதல் ரோபோ கப்பல்இதோ வந்துவிட்டது உலகின் முதல் ரோபோ கப்பல். இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கப்பல் கட்டுமான நிறுவனமான ‘Sea - Kit’ இதை வடிவமைத்துள்ளது. 36 அடி நீளமுள்ள இந்தக் கப்பல், ஜிபிஎஸ் சிக்னலைப் பின்தொடர்ந்து இயங்கும். இதைக் கரையில் இருந்துகொண்டே ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம். மாலுமிகள் தேவையில்லை.

அடுத்த வருடம் இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையிலிருந்து அட்லாண்டிக் கடலை கடக்கவிருக்கிறது இந்த ரோபோ கப்பல். அப்போது இரண்டரை டன் அளவுள்ள பொருட்களை இது எடுத்துச் செல்லவிருக்கிறது. இந்த கார்கோ சேவை வெற்றி பெற்றால் மனிதர்களும் ரோபோ கப்பலில் பயணிக்கலாம்.

இப்படியான ஒரு நிகழ்வு கடல் பயணத்தில் அரங்கேறுவது இதுவே முதல் முறை. வருங்காலத்தில் ரோபோ கப்பல் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். தவிர, மற்ற கப்பல்கள் இயங்க தேவைப்படும் எரிபொருளில் பாதியளவுதான் இதற்குத் தேவை!

த.சக்திவேல்