இந்த ஹெட்போனின் விலை ரூ.1,89,990ஒரு காலத்தில் கிட்னியை விற்று ஐபோன் வாங்கியவர்களின் அதிர்ச்சி செய்தி வெளியாகி பீதியைக் கிளப்பும். இன்று அப்படியில்லை. சாமான்யர்களின் கைகளில் கூட ஐபோன் சுழல்கிறது.
ஆனால், ஐபோனின் இடத்தை ‘சென்ஹைஸர்’ என்ற ஹெட்போன் பிடித்துவிட்டது! ஆம்; ‘Sennheiser Over Ear HD 820 Headphones’ என்ற மாடலின் விலை ரூ. 1,89,990. கிட்னியையும் சொத்தையும் விற்றுத்தான் இந்த ஹெட்போனை வாங்க முடியும் என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விடுகின்றனர். மாதத் தவணையில் கூட கிடைக்கிறது.

ஆனால், ஒவ்வொரு மாதமும் 8,943 ரூபாய் கட்ட வேண்டும். இரண்டு வருட உத்தரவாதம் வேறு.இவ்வளவு விலை கொடுத்து யார் இதை வாங்கப் போகிறார்கள் என்கிறீர்களா? நாளடைவில் இதுவும் ஐபோன் போல அந்தஸ்தின் குறியீடாக இளசுகளின் மத்தியில் மாறும். அப்போது கிட்னியை விற்று ஹெட்போன் வாங்கியவர்களின் செய்தி வைரலாகும்!

த.சக்திவேல்