கென்யா + குஜராத்தி சேர்ந்த கலவை!



ஒரு டன் குங்குமப்பூவை ஒருத்தராகவே சாப்பிட்டிருப்பார் போல... செக்கச் செவேல் என பாலீஷ் ஆக பளபளக்கிறார் நிகிஷா படேல்!
தென்னிந்திய படவுலகம் முழுவதும் பறந்து பறந்து படங்களில் நடிக்கும் செக்ஸி லுக் டால்ஃபின். தமிழில் ‘பாண்டிமுனி’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என பரபரக்கும் நிகிஷா, நம்ம எஸ்.ஜே.சூர்யாவின் கண்டுபிடிப்பு என்பது இன்னும் ஸ்பெஷல்.

இன்னமும் மாடலிங் பொண்ணாவே மின்னுறீங்களே..?

தேங்க்ஸ்! மாடலிங்ல இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். குஜராத்திதான் தாய்மொழி. அப்பா கென்யா, அம்மா குஜராத்தி. இவங்களோட மிக்ஸிங் மல்கோவாதான் இந்த நிகிஷா!படிச்சு வளர்ந்ததெல்லாம் யுனைடெட் கிங்டம்ல உள்ள வேல்ஸ்லதான்.

சைக்காலஜி படிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்து சினிமாவுல நடிக்கணும்னு ஆசை. படிக்கும் போதே, மாடலிங். லண்டன்ல இருக்கும் போதே, ‘மிஸ் வேல்ஸ்’, ‘மிஸ் இந்தியா யுகே’னு அழகிப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு நிறைய ஜெயிச்சிருக்கேன்.

பிபிசியில டிவி ஷோஸ் கூட பண்ணியிருக்கேன். பாலிவுட்ல மாதுரி தீக்‌ஷித் மேம் ரொம்ப பிடிக்கும். அவங்களை டிவில பார்க்கும் போதெல்லாம் நாமும் அது மாதிரி பெரிய ஆக்ட்ரஸ் ஆகணும்னு ஆசை வரும். பாலிவுட் படங்கள்ல நடிக்கறது மட்டும்தான் அப்ப எய்மா இருந்தது.
இந்தியா வந்த பிறகுதான் சவுத் இண்டியன் ஃபிலிம் இண்டஸ்ட்ரி பத்தி தெரிஞ்சுகிட்டேன்.  

தெலுங்கில் பவன் கல்யாண் சாரை வச்சு, எஸ்.ஜே.சூர்யா சார் இயக்கின ‘குமரம் புலி’ வழியா டோலிவுட்ல அறிமுகமானேன். ஆனா, அதில் அறிமுகமாகும் முன்பே, சவுத் இந்தியா ஆஃபர்ஸ் வந்துடுச்சு! எப்படினு கேட்கறீங்களா... இந்தியா வந்ததும் விளம்பரப் படங்கள்ல நடிக்கத் தொடங்கிட்டேன்.

இங்குள்ள டைரக்டர்ஸ் பியூட்டிஃபுல் ஐஸ்... ஃப்ரெஷ் ஃபேஸ்... ஃபெயாரி ஸ்கின்னு தேடி மும்பைக்கு வர்றாங்க இல்லையா... அப்படி வந்தவங்க என்னைப் பார்த்ததும் ‘வாவ்’ சொல்லி நடிக்க கேட்டாங்க! பட் என் சாய்ஸ் ‘குமரம்புலி’. அப்புறம் தமிழ், கன்னடம், தெலுங்குனு பிசியானேன்.
தமிழ்ல ‘என்னமோ ஏதோ’ல என்ட்ரி. தொடர்ந்து இங்க நிறையப் படங்கள் பண்ணிட்டேன். நான் நடிக்க வந்த புதுசுல ஒரே நாள்ல ஏழெட்டு ஆடிஷன்ல எல்லாம் கலந்துக்கிட்டிருக்கேன்!

நல்ல ஸ்கிரிப்ட், நல்ல பேனர், என்னோட ரோலின் முக்கியத்துவம் இதெல்லாம்தான் கவனிச்சு, கமிட் ஆகறேன். இப்ப ‘மார்க்கெட்ராஜா எம்.பி.பி.எஸ்.’ல என் ரோல் பேசப்படும்! இன்ஸ்டால பிகினி காஸ்ட்யூம் போட்டு செம க்ளாமரஸா அசத்தறீங்களே..?

மறுபடியும் தேங்க்ஸ். இங்கே கிளாமரஸ்னாலே தப்பா அர்த்தம் பண்ணிக்கறாங்க. டோலிவுட்ல இருந்து மல்லுவுட் வரை ‘இந்தப் படத்துல நீங்க க்ளாமரஸ் கேர்ள்’னு சொல்லியே கமிட் செய்யறாங்க. ஒருவேளை எக்ஸ்போஸ் பண்றதைத்தான் அப்படி சொல்றாங்களோனு ஆரம்பத்துல ஜெர்க் ஆகியிருக்கேன்!

ஸ்லீவ்லெஸ், முதுகு தெரியறா மாதிரி பேக்லெஸ், ஷார்ட்ஸ், க்ராப் கட் காஸ்ட்யூம்... இதையெல்லாம்தான் கிளாமரஸ்னு குறிப்பிடறாங்கனு அப்புறம்தான் புரிஞ்சுது!ஆனா, கிளாமரஸ் கேர்ள்னா அது இல்ல! என்னைப் பொறுத்தவரை செக்ஸியான காஸ்ட்யூம்னா அது சேலைதான். மறைக்க வேண்டிய இடங்களை எல்லாம் மறைச்சும் மறைக்காமயும் தூக்கிக் காட்டும்! சேலையோட பவர் அது...’’ என்றபடி கண்ணடிக்கிறார் நிகிஷா!

மை.பாரதிராஜா