சுட்டு பிடிக்க உத்தரவுகுற்றச் செயலில் ஈடுபடும் நண்பர்களைப் பற்றிய கதையே ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’.தன் பிரிய மகளின் ஆபரேஷனுக்கு பொருள் தேடியும் கிடைக்காமல் வங்கியில் கொள்ளை அடிக்க முயல்கிறார் விக்ராந்த். அவருக்கு நண்பர்கள் உதவுகிறார்கள். இவர்களை தப்ப விடாமல் சுற்றி வளைக்கிறார் போலீஸ் அதிகாரி மிஷ்கின். கொள்ளையர்கள் கதி என்னவானது, அவர்கள் பிடிபட்டார்களா என்பதுவே மீதிக்கதை.

விக்ராந்த முடிந்த வரையில் தன் இடத்தை நல்ல நடிப்பில் நிரப்புகிறார். சுசீந்திரன் நடிகராக களமிறங்கியிருக்கிறார். மிஷ்கின் முரட்டுப் போலீஸாக, குரலும், உடல் மொழியுமாக செம ஃபிட். ஒரு கட்டத்தில் அவரே படத்திற்கான முழு இடத்தையும் நிறைத்துக் கொள்கிறார்.அதுல்யா ரவிக்கு முன்னேற்றமே.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஆக்ரோஷமும், பரபரப்புமாக அவ்வளவு ஃப்ரெஷ். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் அடிக்கிறது. எண்ணிறந்த லாஜிக் ஓட்டைகளை கணக்கில் வைக்காமல், கருத்தில் கொள்ளாமல் இருந்தால் ரசிக்கலாம்.