ரீடர்ஸ் வாய்ஸ்டானிக்!

இடைப்பட்ட காலத்தில் வடிவேலுவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டாலும் நேசமணி மூலம் உலகப் புகழ் அடைந்துவிட்டார்.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மாணிக்க வாசகம், கும்பகோணம்; இலக்சித், மடிப்பாக்கம்; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

தமன்னா ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்திலுமே தனித்துவம் ததும்பி வழிகிறது.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; பாஸ்கரன், மதுரை; மனோகர், மயிலாப்பூர்; ராமதாஸ், சேலம்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; ரவிக்
குமார், பொள்ளாச்சி.

ஐ.ஏ.எஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாயைப் பற்றிய கட்டுரை நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டி புத்துணர்வு கொடுக்கும் டானிக்.
- மாணிக்கவாசகம், கும்பகோணம்; பிரேமா குரு, சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்; கருணாகரன், போரூர்; ஆத்மநாதன், ஆற்காடு; பிரேமா பாபு, சென்னை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; கலிவரதன், கீழ்க்கட்டளை.

அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத மலைவாழ் பகுதி மக்களுக்கு தம் முயற்சியால் கிட்டத்தட்ட ஐநூறு கழிப்பறைகளை கட்டித்தந்திருக்கும் வன அதிகாரி சுதா நிச்சயமாக வன தேவதைதான்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; கைவல்லியம், மானகிரி; பிரேமா பாபு, சென்னை; முரளி, நங்கநல்லூர்; ப.மூர்த்தி, பெங்களூரு.

பல்லாயிரம் பார்வையாளர்களை பின்புலத்திலும் பதின்மூன்று பிளேயர்களை களத்திலும் கொண்ட கிரிக்கெட் விளையாட்டை வர்ணிக்கும் முப்பெரும் தேவியர் பற்றிய அறிமுகம் சூப்பர்.
- தெய்வசிகாமணி, வேளச்சேரி; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; பிரேமா குரு, சென்னை; மாணிக்க வாசகம், கும்பகோணம்; க.நஞ்சையன், பொள்ளாச்சி.

பட்டாபட்டி பாக்கெட்டுகளில் கைவிட்டு, பின்பு இல்லையென்று விரித்துக் காட்டுகிற வடிவேலுவின் ஸ்டில்லை ‘இந்தியாவில் வேலை இல்லை’ கட்டுரைக்கு அட்டகாசமாக பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள்.
- கருணாகரன், போரூர்; ஜெர்லின், ஆலந்தூர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

நியூ அட்மிஷனாய் திரையுலகில் கலக்கப்போகும் கனவுக்கன்னிகள் பற்றிய அறிமுகக் கட்டுரையை வெளியிட்டு பல இளைஞர்களின் தூக்கத்திற்கு வேட்டு வைத்துவிட்டீர்கள்.
- மனோகர், மேட்டுப்பாளையம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; அ.யாழினி பர்வதம், சென்னை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

மாளவி நாட்டு மக்களுக்காக 81 பள்ளிக்கூடங்களைக் கட்டித்தரும் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், டென்னிஸ் ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல, உலக மக்களின் மனங்களிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜெரிக், கதிர்வேடு; மனோகர், மேட்டுப்பாளையம்; சைமன் தேவா, விநாயகபுரம்; செம்மொழி, சேலையூர்.