அந்தக் குழந்தையே நீங்கதான்!



கலகல காஜல் முகத்தில் இப்போது ஃப்ரெஷ் புன்னகை. ஷங்கரின் ‘இந்தியன்2’வுக்கு ரெடியான குஷி அது.

கடந்த சில மாதங்களாக ஈவினிங் ஃபீவரால் மும்பை வீட்டில் ஃபுல் ரெஸ்ட்டில் காஜல் இருந்தார் அல்லவா? அப்போது அவர் செய்த  இரண்டு விஷயங்கள்- தனக்குப் பிடித்தமான டொனால்ட் டக்கின் கார்ட்டூன் கலெக்‌ஷன்களைப் பார்த்ததும், கேம் ஆஃப் த்ரோன்ஸ்  கேம்ஸை விளையாடியதும்.‘‘எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..?!’’ குழந்தையாகக் குதூகலமாகிறார் காஜல்.