The Queen of Porn!!




இருபது வருடங்களுக்கு முன்பு இளசுகளின் அந்தரங்க காதலி, கனவுக்கன்னி எல்லாமுமே ஜென்னா ஜெமிஸன்தான். அந்தளவுக்கு தன்  கட்டுடல் அழகால் ஆண்களைக் கட்டிப்போட்டிருந்தார். இந்தியாவில் இவரது படத்தைப் பார்ப்பதற்காகவே இன்டர்நெட் சென்டரை நோக்கி  படையெடுத்தவர்கள் ஏராளம்.‘தி குயின் ஆஃப் போர்ன்’ என்று ரசிகர்களால் பிரியத்துடன் வர்ணிக்கப்பட்ட ஜென்னா, 2008ல் ‘அந்த’  மாதிரியான படங்களுக்கு முழுக்குப்போட்டுவிட்டு கல்யாணம், குடும்பம் என்று செட்டிலானார்.ஆபாசப் படங்களில் நடிப்பதை  நிறுத்திவிட்டாலும் ஆண் - பெண் பாரபட்சமின்றி நூற்றுக்கணக்கானவர்களுடன் உறவு வைத்துக் கொண்டார்.

அதனால் அவரின் இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தன. பிறகு பார்ட்னர் டிட்டோவுடனான லிவிங் டுகெதர் வாழ்க்கையில்  இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். அந்த வாழ்க்கையும்கசக்க, டிட்டோவையும் பிரிந்தார். 35 வயதைக் கடந்த பின்பும் ஜென்னாவின்  கவர்ச்சி குறையவில்லை. மறுபடியும் 2013ல் வெப்கேம் மாடலாக களமிறங்கி நேரடியாகவே ரசிகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டி  கோடிக்கணக்கில் பணத்தை அள்ளினார்.கடந்த வருடம் இஸ்ரேலிய பாய் ஃபிரண்டுடன் நெருக்கமாகி மூன்றாவதாக ஒரு பெண்  குழந்தைக்கும் தாயாகிவிட்டார். மகள் பிறந்த மகிழ்ச்சியில் ஃபிட்னஸ் விஷயத்தில் கவனக் குறைவாக இருந்துவிட, நான்கே மாதங்களில்  உடல் எடை மலை போலக் கூடிவிட்டது.

அசைவ உணவை அதிகமாக எடுத்துக்கொள்ளும் ‘கீட்டோ’ டயட்டை ஏப்ரல் மாதத்திலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தார். 80% கொழுப்பும்,  15% புரதமும், 5% கார்போஹைட்ரேட்டும் கலந்த டயட் இது. அத்துடன் மாலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 11 மணி  வரைக்கும் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் ஃபாஸ்ட்டிங் வேறு. ஏழே மாதங்களில் 84 கிலோவிலிருந்து 50 கிலோவாக  குறைந்துவிட்டார். அதே பழைய ஜென்னா ஜெமிஸனாகக் காட்சியளிக்கிறார். இப்போது உடல் எடையைக் குறைக்க இன்ஸ்டாவில்  டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார்.போதாதா... ரசிகர்கள் தங்களின் மடிக்கணினியின் மானிட்டரில் ஜென்னா எப்போது வெப்கேமில்  தோன்றுவார் என்று காத்துக்கிடக்கிறார்கள்! இத்தனைக்கும் ஜென்னாவின் வயது 44.                

-த.சக்திவேல்