சமந்தாவின் கண்டிஷன்கொரியன் படம் ஒன்றின் அஃபிஷியல் ரீமேக்கில் சமந்தா நடிப்பதும், தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்குவதும் நாம் அறிந்த செய்தி. அறியாதது, சமந்தாவின் கண்டிஷன். அது இசையமைப்பாளர் தொடர்பானது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ‘மகாநடி’ என்றும் சக்கைப் போடு போட்ட சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு இசையமைத்தவர் மிக்கி ஜே மேயர்.

அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைவிட பின்னணி இசை ஒட்டுமொத்தமாக அனைவராலும் சிலாகிக்கப்பட்டது. எனவே, இந்தப் படத்துக்கும் மிக்கி ஜே மேயர்தான் இசையமைக்க வேண்டும் என சமந்தா கண்டிஷன் போட்டார். தயாரிப்பாளர் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இரு வேடங்களில் சமந்தா நடிக்கிறார். அதில் ஒன்று வயதான வேடம்!