பஞ்சாமிர்தம்!



விஜய் பற்றிய ஐந்து பன்ச் பிட்ஸ்களும் பஞ்சாமிர்தம்!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

காஜலை பொது இடத்தில் ஒளிப்பதிவாளர் திடீரென முத்தமிடும்போது அவர் தடுத்திருந்தால் மலினமான பப்ளிசிட்டி உருவாகியிருக்காதே!
- ஆசை.மணிமாறன், திருநெல்வேலி; மீனாட்சி, திருமுல்லைவாயில்; பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; த.சத்தியநாராயணன், அயன்புரம்: சண்முகராஜ், திருவொற்றியூர்.

குழந்தைகளின் பசிப்பிணி அகற்றும் தமிழாசிரியர் இளமாறனின் நற்பணி போற்றுவோம்!
- மனோகர்,கோவை; பூதலிங்கம், நாகர்கோவில்; சண்முகராஜ், திருவொற்றியூர்; முரளிதரன், மதுரை; லட்சுமிநாராயணன், மதுரை; சாந்தா, மதுரை; மகேஸ்வரி, பொள்ளாச்சி; ராமகண்ணன், திருநெல்வேலி; முருகேசன், கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; சத்தியநாராயணன், அயன்புரம்.

காமராஜர் ஆட்சி நோக்கித்தான் பயணம் என்ற ஜி.கே.வாசனின் பேட்டி செம டச்சிங்!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முருகேசன், கங்களாஞ்சேரி; நடராஜன், திருமுல்லைவாயில்; முரளிதரன், மதுரை.

மீடூ-வை பர்சனல் விஷயம் எனச் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ், தடாலடிப்பொண்ணுதான்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

தமிழகத்தின் சதுப்புநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் செய்தி பகீர் அதிர்ச்சி.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

‘பொறந்த வீடு போலத்தான் புகுந்தவீடு’ என ஜாலி லைஃப் ரகசியம் சொன்ன ஜோதிகாவின் பேட்டி முந்திரிப்பொங்கல் ருசி.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; மனோகர், கோவை; ஜோசப், சென்னை; நடராஜன், திருமுல்லைவாயில்; நஞ்சையன், பொள்ளாச்சி; அக்‌ஷயா மாறன், திருவண்ணாமலை.

அமீரின் பேட்டியில் அரசியல் காரம் தூக்கல். கதை திருட்டுக்கு அவர் சொன்ன சாம்பிள்கள் மறுக்கமுடியாதவை.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; மனோகர், கோவை.

‘தலபுராணம்’ வழியாக முந்நூறு ஆண்டுகளாகச் செயல்படும் ஆவணக்காப்பகம் குறித்த செய்தி பிரமிப்பு தந்தது.
- பி.ஜெரிக், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘காபி டேபிளி’ல் வளைகுடா நாடுகளில் இறக்கும் இந்தியர்கள் குறித்த செய்தி வேதனை தந்தது.
- பி.ஜெரிக், சென்னை.

பேயாக திகிலூட்டும் அஞ்சலியின் ஆசை அமோக வெற்றி பெறட்டும்.
- ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை.

சமத்துவப் பெரியாரையும் கேள்வித்தாள் வழியா சாதிக்குள் கொண்டு வந்த சமூகநீதி வில்லன்கள் தமிழகத்தில் என்றும் வெல்ல முடியாது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; லட்சுமி நாராயணன், வடலூர்; தேவா, கதிர்வேடு.