மீண்டும் டார்லிங்!யெஸ். இயக்குநர் அட்லி தலைப்பில் உள்ளதை சொல்லிச் சொல்லித்தான் துள்ளிக் குதிக்கிறார். டைரக்டராக அவர் அறிமுகமான படம், ‘ராஜா ராணி’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நயன்தாரா. படப்பிடிப்பு சமயத்தில் ‘டார்லிங்... டார்லிங்...’ என நயனை அழைத்து அட்லி வேலை வாங்கியதை கோடம்பாக்கம் அறியும். இதை நயனும் பெரிதுபடுத்தவில்லை. ‘ராஜா ராணி’யும் சூப்பர் டூப்பர் ஹிட்.

அட்லியும் மோஸ்ட் வான்டட் டைரக்டரானார். ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து விஜய்யை வைத்து படம் எடுத்து தன் சக்சஸ் ரேட்டை உயர்த்தினார். இப்போது ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் சினிமாவை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தனக்கு ராசியான நடிகை என நயனைக் கருதுவதால், ஷூட்டுக்கு முன்பே இப்படமும் சக்சஸ் என அட்லி துள்ளிக் குதிக்கிறார்! ‘டார்லிங்... டார்லிங்...’ என முணுமுணுக்கிறார்!

- காம்ஸ் பாப்பா