எட்டு லிட்டர் பீருக்கு சிறை!வீக் எண்ட் விருந்துக்கு எட்டு லிட்டருக்கு மேல் மதுபானங்களை வைத்திருப்பவர்களுக்கு சிறைத்தண்டனையுடன் அபராதமும் உண்டு என  மக்கள் நலனில் திடீர் அக்கறை காட்டியுள்ளது உத்தரப்பிரதேச அரசு.

1910ம் ஆண்டு ஆங்கிலேயரின் அரதப்பழசான வரிச்சட்டத்தை அண்மையில் தூசு தட்டியுள்ள உத்தரப்பிரதேச அரசு, மக்களை  நல்வழிப்படுத்த, எட்டு லிட்டருக்கு மேல் மதுபானம் வைத்திருப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம்  அபராதம் என கறார் காட்டியுள்ளது. எட்டு லிட்டர்களுக்கு மேல் ஒருவர் வைத்திருக்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பாட்டிலுக்கு ரூ.72 என  கணக்கு வைத்து வரி வசூலிக்கப்படும் என்பது உப தகவல்.

திடீர் விதிக்கு என்ன காரணம்?

தில்லி வழியாக ஏராளமான மதுப்புட்டிகள் வரி வலையில் மாட்டாமல் குடிமகன்களை மகிழ்விப்பதே!                     

-ரோனி