நியூஸ் வே
தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிரபலப்படுத்த ஒரு புரொமோ எடுக்க திட்டமிட்டுவரும் ஷாருக் கான், அதில் நடிக்குமாறு ‘கொலம்பிய பியூட்டி’ ஷாகிராவிடம் கேட்டிருந்தார். உலகம் சுற்றும் பிஸி பாடகியான அவர், நேரமில்லை என மறுத்துவிட்டார். தனது அடுத்த படத்திலாவது ஷாகிராவை வைத்து ஒரு அயிட்டம் சாங் ஷூட் பண்ண நினைத்தார் ஷாருக். அதற்கும் ஷாகிராவின் பதில், ‘ஸாரி!’
பத்மப்ரியாவுக்கு தமிழில் சுத்தமாக படங்கள் இல்லை. விருது வாங்கும் ஆசையில் அவர் நடித்த மலையாளப் படங்களும் ஏமாற்றிவிட, இப்போது பெங்காலி படங்களை குறிவைத்திருக்கிறார். மார்க்கெட் சூடு பிடிக்கிறதோ இல்லையோ, விருது நிச்சயம் என்ற நம்பிக்கையில் கொல்கத்தாவில் டேரா போட்டிருக்கிறார் பத்து.
கங்கனா ரணாவத்திடம் கதை சொல்லப் போனார் ஒரு இளம் இயக்குனர். கதை பிடித்துவிட, ‘இதில் அமீர் கான் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும்’ என்றார் கங்கனா. ‘எனக்கு அமீர் பழக்கமில்லை’ என இயக்குனர் நெளிய, கங்கனாவே அமீர் ஆபீசுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்லி, கதையை அனுப்பினார். அமீருடன் ஜோடி சேர நினைக்கும் கங்கனாவின் கனவு பலிக்குமா?
|