நீரூற்று!



கட்சி சாயங்களைக் கடந்து எதிர்க்கட்சியுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப்பணிகளை அயராது செய்த பினராயி விஜயன், ஜனநாயகத்தின் நம்பிக்கை நீரூற்று.
- டி.எஸ்.தேவா, கதிர்வேடு; கைவல்லியம், மானகிரி; முருகேசன், கங்களாஞ்சேரி; லட்சுமி நாராயணன், வடலூர்.

மழைவெள்ளத்தால் கதிகலங்கிய கேரளாவின் நிலைமைகளை உள்ளது உள்ளபடியே காட்டியது நாகபிரகாஷின் கட்டுரை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; சண்முகராஜ், திருவொற்றியூர்; மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மயிலைகோபி, அசோக்நகர்.

பொக்ரான் அணுகுண்டு, தங்க நாற்கர சாலை என தேசத்திற்கு பாடுபட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு ‘குங்கும’த்தின் கம்பீர அஞ்சலி, நெகிழ்ச்சி.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், கோவை; மனோகர், திருச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி.

உலகச்சந்தையே டாலர்களை நம்பியிருக்கும்போது நிலையற்ற அரசியல் சூழல் பொருளாதாரத்தை குலைக்கும் என்பது சர்வநிச்சய உண்மை.
- மனோகர், கோவை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

தாவரங்களைப் பற்றிய அரிய செய்திகளை அறியத்தரும் ‘ஹோம் அக்ரி’ தொடருக்கு பாராட்டுகள்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ஆட்டிசக் குழந்தைகளுக்கான சிறப்பு மையம் பாராட்டவேண்டிய புதுமையான தொலைநோக்கு முயற்சி.
- பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்; மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

96 வயதில் நான்காம் வகுப்பு பாஸாகி, பத்தாம் வகுப்பு படிக்க ரெடியாகும் கார்த்தியாயினி பாட்டியின் கசடறக் கற்கும் ஆர்வம் பெரும் வியப்பு.
- ராஜ்குமார், குன்னூர்; பூதலிங்கம், நாகர்கோவில்; ஜனனி, திருவண்ணாமலை; முருகேசன், கங்களாஞ்சேரி.

அமலாபாலின் ஆன்மிக அனுபவங்கள், ‘மைனா’ பக்குவமாகி வருவதை சொன்னது.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; அக்‌ஷயா, திருவண்ணாமலை.

வின்டேஜ் கார் முதல் மினியேச்சர் கார்கள் வரையில் சேமிக்கும் வர்தன் தன் கலெக்‌ஷன்கள் மூலம் பிரமிக்க வைத்துவிட்டார்.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்; மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

நன்றி மறக்காமல் உதவிய ஆபீசரின் பெயரில் செயல்படும் கூரைக்கடையின் வரலாறும் மெனுவும் வாசிக்கும்போதே அவ்வளவு ருசி.
- டி.எஸ்.தேவா,திர்வேடு; மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்; எஸ்.பாபு, பழனி; ராம.கண்ணன், திருநெல்வேலி.

காதல் காத்திருப்பை சொற்களில் தேனூற வடித்த காத்திருப்பு கவிதை, ஏ ஒன் தரம்!
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; சேவுகப்பெருமாள், பெருமகளூர். -ரீடர்ஸ் வாய்ஸ்