இரட்டைக் குழந்தை!
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸியின் காதல் மனைவி கார்லா புரூனி கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பெற்றுக் கொள்வதில் பல ஆண்டுகளாக அதிபர் ஆசை காட்டிவந்தார். இந்நிலையில் கார்லா கர்ப்பமாக இருப்பதாகவும், வரும் அக்டோபரில் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவார் என்றும் செய்திகள். 43 வயதில் கர்ப்பமாகி இருக்கும் கார்லா, குழந்தைகள் நலனுக்காக புகை பிடிப்பதை விட்டுவிட்டார்.
லவ்?ஜெனிபர் லோபஸின் ஏழாவது ஆல்பம் இந்த வாரம் ரிலீஸ். ‘லவ்?’ என கேள்விக்குறியோடு காதலை அணுகும் ஆல்பம். 41 வயதில் உலகின் மிகச்சிறந்த அழகியாக ‘பீப்புள்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட ஜெனிபரின் இந்த ஆல்பத்தை எல்லா விமர்சனங்களும், ‘மோசம்’ என்கின்றன. ‘அதிரவைக்கும் இசைக்கு நடுவே உடற்பயிற்சி செய்வது போல இருக்கிறது’ என ஜெனிபரின் நடனத்தை ஒரு பத்திரிகை கிண்டல் செய்திருக்கிறது. ஆனாலும் கவலைப்படாமல் மூன்று வாரங்கள் இதன் விற்பனைக்காக பல நகரங்களுக்கு விசிட் அடிக்கிறார். இதற்கிடையே இந்த ஆல்பத்தில் ஒரு பாடல் தன்னைப் பற்றி இருப்பதாக ஜெனிபரின் முன்னாள் காதலர் ஓஜானி நோவா குற்றம் சாட்டி காமெடி செய்திருக்கிறார்.ஜெனிபர் லோபஸின் ஏழாவது ஆல்பம் இந்த வாரம் ரிலீஸ். ‘லவ்?’ என கேள்விக்குறியோடு காதலை அணுகும் ஆல்பம். 41 வயதில் உலகின் மிகச்சிறந்த அழகியாக ‘பீப்புள்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட ஜெனிபரின் இந்த ஆல்பத்தை எல்லா விமர்சனங்களும், ‘மோசம்’ என்கின்றன. ‘அதிரவைக்கும் இசைக்கு நடுவே உடற்பயிற்சி செய்வது போல இருக்கிறது’ என ஜெனிபரின் நடனத்தை ஒரு பத்திரிகை கிண்டல் செய்திருக்கிறது. ஆனாலும் கவலைப்படாமல் மூன்று வாரங்கள் இதன் விற்பனைக்காக பல நகரங்களுக்கு விசிட் அடிக்கிறார். இதற்கிடையே இந்த ஆல்பத்தில் ஒரு பாடல் தன்னைப் பற்றி இருப்பதாக ஜெனிபரின் முன்னாள் காதலர் ஓஜானி நோவா குற்றம் சாட்டி காமெடி செய்திருக்கிறார்.