செம ஃபரெஷ்!
குழந்தைகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாலியல் கொடுமைக்கு உள்ளாகியிருப்பது வேதனையின் உச்சம்.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; முத்துவேல், கருப்பூர்; நவீன்சுந்தர், திருச்சி.

ரேஷ்மா கட்டாலாவின் சினிமா எக்ஸ்பீரியன்ஸ் அவ்வளவும் செம ஃப்ரெஷ்.
- ஆர்.ஜெசி, மடிப்பாக்கம்; பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

மைம் கோபியின் முகமூடி கலெக்‌ஷன்களைப் பார்த்து அசந்து போனோம்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி;

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
‘நாச்சியார்’ ஹீரோயின் இவானா பேட்டி,

ஸ்பெஷல் பரிசு.
- மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி.

திருவாரூர் பாபுவின் ‘ஒரு கப் டீ’, விறுவிறுப்பின் நீட்சியில் மானுடத்திற்கான திறப்பு.
- காயாதவன், அவிநாசி; முத்துவேல், கருப்பூர்.

யூத்ஃபுல் எடிட்டர்ஸ், அபார டேலன்ட் மனிதர்களை கவுரவிக்கும் அட்டகாசப் பதிவு.
- மயிலை கோபி, அசோக்நகர்; நாகராஜன், குண்டூர்; பாபுகிருஷ்ணராஜ், கோவை.

நாட்டுப்புறக் கலைகளை பிரபலப்படுத்தும் ஹாலிவுட் கேரக்டர்ஸை பிச்சு உதறும் செல்வக்குமார், சினிமாவுக்கு சூப்பர் வரவு.
- தியாகராஜன், கீழ்வேளூர்.

‘கவிதை வன’த்தில் வெளியான ‘பெயரெச்சம்’, ‘பரிணாமம்’ என இரு கவிதைகளும் பட்டை தீட்டிய வைரம்.
- கலைச்செல்வி, செருமங்கலம்; விஜயநிர்மலன், சென்னை.

‘இளைப்பது சுலபம்’ தொடரில் பா.ராகவன் விளக்கி எழுதிய டயட் குறிப்புகள் எடை குறைப்புக்கு சூப்பர் உற்சாகம் தந்து நிறைவடைந்தது.
- சத்யா, கருப்பூர்.

‘மக்களோடு இறங்கி வேலை செய்யணும்’ என சூப்பர் ஸ்டார்களுக்கு ஜெயப்பிரதா கொடுத்த அட்வைஸ் சூப்பர்.
- மனோகர், கோவை; பாக்கியவதி, கருப்பூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

மருந்தே இல்லாத எம்.எஸ். நோயின் விளைவுகள் செம ஷாக். எதிரிக்குக் கூட வரக்கூடாத நோய் சார் இது!
- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், கோவை; நாகராஜன், குண்டூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நவாப், திருச்சி; த.சத்தியநாராயணன்,  அயன்புரம்.

‘பக்கோடா ஸ்பெஷல்’ கட்டுரையைப் படித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க உதவும் திருநங்கை கல்கியின் முயற்சி மகத்தானது.
- தேவதாஸ், பண்ணவயல்; காந்தி லெனின், திருச்சி; சைமன்தேவா, விநாயகபுரம்.

தாராவியைப் பற்றிய புத்தம் புதிய விவரங்கள் திக்குமுக்காட வைத்தன.
- முத்துவேல், கருப்பூர்; ப்ரீத்தி, செங்கல்பட்டு; மல்லிகாகுரு, சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அருட்பெரும்ஜோதி வள்ளலார் மெஸ் சத்தியநாதனின் கதை நெகிழ்ச்சிப்பெருக்கு.
- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; அத்விக், அசோக்நகர்; லெட்சுமி நாராயணன், வடலூர்; ராமகண்ணன், திருநெல்வேலி; சித்ரா, திருவாரூர்.

- ரீடர்ஸ் வாய்ஸ்