ராணுவத்தில் பெண்கள்!பெண்களுக்கான ட்ரைவிங் லைசென்ஸ் பிளானை அறிவித்த சவுதி அரேபியா, அதிரடியாக பெண்களை ஆர்மியில் சேர்க்கவும் தயார் என சர்ப்ரைஸ் அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. மன்னர் சல்மான் மற்றும் அவரது மகன் முகமது சல்மான் ஆகியோரின் ஆட்சியில் சவுதி அரேபியா பல்வேறு சீர்திருத்தங்களைச்  செய்துவருகிறது.

ரியாத், மெக்கா, அல்க்வாசிம், அல்மதினா ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் ராணுவத்தில் இணையலாம் என அரசின் பொது பாதுகாப்புத்துறை  அறிவித்துள்ளது. 25 - 30 வயதுக்குட்பட்ட மணமாகாத சவுதி குடிமகள்கள் இதற்கு அப்ளை செய்யலாம். 2030க்குள் சவுதி அரேபியாவில் பல்வேறு  சீர்திருத்தங்களைச் செய்ய மன்னரும் இளவரசரும் ஆர்வமாக உழைத்து வருகின்றனர்.              

- ரோனி