ராணியின் ஹேண்ட் பேக் மர்மம்!இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக கவனிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். அது அவர் கையில் உள்ள  ஹேண்ட் பேக். ஏறத்தாழ ஒரே ஸ்டைலில் இருக்கும் பேக்கை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏன் கொண்டு வருகிறார்? ராணி பயன்படுத்தும் பேக்கை  இங்கிலாந்தைச் சேர்ந்த லானர் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சிம்பிளான இந்த பேக்கை எலிசபெத்தின் அம்மா சிறுவயதில் அவருக்கு பரிசாக
அளித்தாராம்.

அம்மாவின் நினைவாக 91 வயதிலும் அதேபோன்ற ஹேண்ட் பேக்கை பயன்படுத்துகிறார்! ‘‘ராணிக்கு பலவகை பேக்குகளை உருவாக்கித் தந்தாலும் அவர் இந்த  பேக்கை மட்டுமே செலக்ட் செய்கிறார். இது இல்லாமல் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பதில்லை!’’ என்கிறார் லானர் நிறுவனத்தின் இயக்குநரான ஜெரால்ட்  போட்மர்.    

- ரோனி