ஏழை முதல்வர்!சம்பளம் கிம்பளம் என லம்ப்பாக சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கும் பதவியில் அமர்ந்திருந்தபோதும் ஏழையாக இருக்கிறார் இந்திய மாநில முதல்வர் ஒருவர்! திரிபுரா மாநில முதல்வரான மாணிக் சர்க்கார்தான் இப்பெருமைக்கு உரியவர். முதல்வர் பணிக்கு கிடைக்கும் சம்பளமான ரூ.26,315யை கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டு அதிலிருந்து ரூ 9,720 மட்டும் செலவுகளுக்காக பெற்றுக் கொள்கிறார்.

இவரது வங்கியில் இருக்கும் இருப்பு, ரூ.1520. அகர்தலாவின் கிருஷ்ணாநகரிலுள்ள சிறு நிலத்தை தன் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவிடம் இருபது கிராம் தங்கம் மட்டுமே உள்ளது என தேர்தல் ஆணைய சொத்து தாக்கல் விவரங்கள் தெரிவிக்கின்றன!  

- ரோனி