பிங்க் ஆட்டோ வந்தாச்சு!பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் ட்ராக்கர் வசதிகளோடு பெங்களூருவில் பிங்க் ஆட்டோக்கள் வரும் ஏப்ரல் முதல் ஓடத்தொடங்கும் என நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் புவனேஸ்வர், தில்லி, அசாம் தொடங்கி பெங்களூருவிலும் இத்திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.

‘‘பெண்களுக்கான நலத்திட்ட உதவியாக ஆட்டோவுக்கு தலா 80 ஆயிரம் ரூபாயை மானியமாக அளிக்கிறோம். ஆண்,  பெண் இருவருக்கும் பயணிகளை கண்ணியமாக நடத்துவதற்கு பயிற்சியளிக்கிறோம்!’’ என்கிறார் சமூகநீதி மற்றும் நல்வாழ்வுத்துறை கமிட்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீப் ஜாகீர். பிங்க் ஆட்டோக்களுக்கு பெண்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து இதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளார் நகர மேயர் சம்பத்ராஜ்.  

- ரோனி