சிறுவனோடு சர்ஃபிங் ஆடிய சுறா!



-ரோனி

தன் 10 வயது மகன் கடலில் அமேசிங்காக சறுக்கி வருவதை ஹிஸ்டரி அறியட்டும் என ஃப்ளாஷ் போட்டு போட்டோ எடுத்த தந்தை - மகனோடு வெள்ளைச் சுறா ஒன்றும் சர்ஃபிங் செய்யும் என துளியும் எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலியாவின் சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த கிறிஸ் ஹாசோன் ‘‘எனது மகன் சர்ஃப் செய்து வரும்போது அவன் காலுக்கு கீழே கருப்பாக தெரிந்ததை லட்சியமே செய்யவில்லை.

அவனது சர்ஃபிங் முடிந்தபின் இரண்டாவதாக எடுத்த போட்டோவில் சர்ஃப் போர்டின் கீழே 8 அடி நீள சுறாவின் தலையைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது!’’ என வியர்த்துப் போய் பேசுகிறார். சிறுவனிடம் கேட்டபோது, ‘‘நான் சர்ஃப் போர்டு அருகே இருப்பது ஏதோ மரத்துண்டு என்று நினைத்தேன். மீன்கள் கூட்டமென்று சுறா நினைத்திருக்கலாம்!’’ என்கிறான் அப்பாவியாய்.