நம்பலாமா பாஸ்?!



-ரீடர்ஸ் வாய்ஸ்

என் மனைவி வரலட்சுமியின் பேட்டியைப் படித்த நண்பர்கள் ‘இவ்வளவு வெளிப்படையா பேசியிருக்கிறார்களே’ என ஆச்சரியத்துடன் கேட்டார்கள். பேட்டியில் ‘தெலுங்கில் சில லட்சங்களில் சம்பளம் வாங்கிய பவன் கல்யாணுக்கு பிரேக் கொடுத்தது நாங்க’ என்று சொல்லியிருக்கிறோம். அது பவன் கல்யாண் அல்ல. ரவிதேஜா.
- எடிட்டர் மோகன், சென்னை.

சவுகார்பேட்டையில் குங்குமப்பூ லஸ்ஸி குடித்து, ஜீராவில் நனைத்த ஜிலேபி சுவையோடு இன்ச் பை இன்ச் நடந்த உணர்வு ஆசம்!
- ஆர். கமாலினி, பெங்களூரு.

இன்னர்வேரில் லட்சம் மேட்டர்களை நறுவிசாக சொல்லியது அடேங்கப்பா ஆச்சரியம். 
- டி.மிருதுளா, கோவை.

மக்கள் களப்பணியாளரான கவிஞர் இன்குலாப்பின் அறிமுகம், யுகபாரதியின் எழுத்தில் முற்றத்தின் வேப்பமர நிழலாய் இனிமை.
- எஸ்.ரங்கநாதன், வேலூர்.

டாக்டர் பன்னீர்செல்வத்தின் ஜூ அனுபவங்கள் காரப்பொரி. பல்வேறு காஸிப்களிலும் கலங்காத நடிகர் ஜனகராஜின் செகண்ட் இன்னிங்
சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!
- கே.சோமராமன், நாகர்கோயில்.

100 ஆண்டுகளுக்கு முன்பே மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளமா? துரைசாமி அய்யங்காரின் வழக்குரைஞர் தொழில் தாண்டிய செத்துவிடாத மனிதநேயம் நெகிழ்ச்சி.
- செ.தமிழமுதன், திருப்பூர்.

பிட்காயினிலும் ரூபாய் சேவ் செய்யலாம்னு ரூட்டு தலயாக பிளான் சொல்கிறீர்களே! நம்பலாமா பாஸ்?
- ஆர்.கண்மணி, சென்னை - 78.

பல மனிதர்களோடு உரையாடிய செம்மையான அனுபவச் செறிவு முத்துகிருஷ்ணனின் ஒவ்வொரு வார்த்தையிலும் புடமிட்ட தங்கமாய் மின்னுகிறது.
- இரா.முருகானந்தம், திருவண்ணாமலை.

கார்புரேட்டரில் வரும் புகை கபால மோட்சம் தருமா? ஏன் பாஸ் இப்படி டீட்டெய்ல் நியூஸில் திகில் கிளப்புறீங்க?
- கே.ஆர்.ஜானகி, திருநெல்வேலி.