நடுரோட்டில் BF!



-ரோனி

சோர்வான மாலையில் இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரின் சாலையில் சென்றவர்கள் அப்படியொரு 5 நிமிட பரவசம் கிடைக்கும் என சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. பின்னே, ஆஃபரில் புடவை வாங்கு, பாடிலோஷன் வாங்கு என ஒப்பாரி வைக்கும் விளம்பரப் பலகையில் திடீரென கிளுகிளு படத்தை லைவில் ஓட்டி புரை ஏற்றினால்..? இந்தக் காரியத்தைத்தான் செய்திருக்கிறார் ஐடி மனிதர் ஒருவர்.

விளம்பரப் பலகையில் ஓடிய படம் ‘டோக்கியோ ஹாட்’. படத்தின் சூட்டில் ட்ராபிக் ஜாம் ஆக, டென்ஷனான போலீஸ், இதற்கு காரணமானவரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் அரஸ்ட் செய்தது. அரசின் இணையதளத்தை ஹேக் செய்த 24 வயது ஐடி மனிதர், ‘Bore அடித்ததால் கிளுகிளு படத்தை மக்களுக்கு பகிர்ந்தேன்!’ என தோளை குலுக்கியிருக்கிறார்!

நீலப்படங்களுக்கு 144 சட்டம் அமலிலுள்ள இந்தோனேஷியாவில் சீரியலில் ரொமான்டிக் சீன்ஸ் வந்தாலே திரை ப்ளர் ஆகிவிடும். அப்படியிருக்க இப்படியொரு காரியத்தைச் செய்தால்..? 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை நிச்சயம் என்கிறார்கள். இனி Bore அடித்தால் மிக்சர் சாப்பிடுங்க மக்கா!