கமென்ட் கோயிந்து
திருப்பதியை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும்: தா.பாண்டியன் இந்தியாவுலயே பெரிய உண்டியல் அங்கேதான் இருக்குன்னு அண்ணன் கிட்ட யாரோ சொல்லியிருப்பாங்க போல!
வண்டலூர் பூங்கா மிருகங்களை இணையதளத்தில் 24 மணி நேரமும் பார்க்க ஏற்பாடு: முதல்வர் அதெல்லாம் வேணாம்மா, அதான் அடிக்கடி சட்டசபை நிகழ்ச்சியை டி.வி.ல போடுறாங்களே!
அதெல்லாம் வேணாம்மா, அதான் அடிக்கடி சட்டசபை நிகழ்ச்சியை டி.வி.ல போடுறாங்களே! வெளிநாட்டுப் பாடகர் மக்களுக்கு சேவை செய்றாரு; ஆனா நம்ம நாட்டுல மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அரசியல்வாதிங்க சபையில பாட்டு பாடிட்டு திரியிறாங்க!
தம்பி மனைவி மீது ஒருதலைக் காதல், செல்போன் டவரில் ஏறிய அண்ணன்: செய்தி நல்லா விசாரிங்கய்யா... அந்தாளு அந்த ஏரியாவுல டவர் சர்வீஸ் பண்ற லைன்மேனா இருக்கப் போறாரு!
சுயாட்சி, நல்லாட்சியாக மாறி உள்ளது: மோடி பெருமிதம் அது எந்த நாட்டுலன்னு சொன்னீங்கன்னா, எல்லாரும் அங்கயே போயிருவோம் தல!
மத்திய அரசின் ஜி.எஸ்.டி சட்டத்தை மதிமுக எதிர்க்கிறது: வைகோ ரைட்டு! அண்ணன் நடைபயணத்துக்கு ரெடி ஆகிட்டாப்டி போல...
சக்திவேல் மருதமுத்து ஓவியங்கள்: கண்ணா
|