நந்தி தரிசனம்உள்ள(த்)தைச் சொல்கிறோம்

நோக்கிக் காணக் கதவைத் திறவுமே எனும் பொறுப்பாசிரியர் அவர்களின் தலையங்கம் பட்டு கத்தரித்தாற்போல் இருந்தது. பாராட்டுகள்.
-  சரோஜா கிருஷ்ணன், விழுப்புரம்.

64 யோகினியரின் சில அற்புத அபூர்வ தரிசனம் கண்டேன். உடனே ஃப்ரேம் போட்டுவிட்டேன். அரிய பொக்கிஷத்தை வரைந்த சாய்த்ருணுக்கும் பரணிகுமாருக்கும் பாராட்டுகள். வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார் கண்டேன். மலையில் பெரியது எது, கடலிற்பெரியது எது, உலகிற்
பெரியது எது இவற்றிற்கான பதில்கள் நன்றாக இருந்தன. அதிலும் கடலிற்பெரிது பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவி  எனும் வரிகளைப்படித்து மெய் சிலிர்த்துப்போனேன்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

மகாபிரதோஷவிழா  எனும் தலைப்பில் பூசை.ஆட்சிலிங்கம்  அவர்களின் கட்டுரை பிரதோஷம் பற்றிய அனைத்து தகவல்
களையும் அள்ளித்தந்திருந்தது. நன்றிகள் கோடி.
- உஷா ராஜகோபாலன், சேலம்.

மகாசக்தியின் நான்கு வடிவங்களைப் பற்றியும் கட்டுரை ஆசிரியர் ரஞ்சனா பாலசுப்ரமணியன் அழகாக விளக்கியிருந்தார். அநேக கோடி வணக்கங்கள்.
- கலாவதி காந்தன், ஈரோடு.

நீலகண்டனின் திருப்பெயர்கள் பிட்ஸ்  அருமையாக இருந்தது. தெளிவு பெறு ஓம் பல சந்தேகங்களை தெளிய வைத்தது. அட்டைப்படம் அருமையோ அருமை. பிடாரியில் இத்தனை வகைகளா? பிரமித்துப் போனேன். வரலக்ஷ்மி விரதக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
- கனகா நரசிம்மன், திருச்சி.

உத்யோக நரசிம்மரை தரிசிக்க வைத்ததற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அனந்தனுக்கு 1000 நாமங்கள் ஆஹா ரகம், அருணகிரிஉலா கட்டுரையும் படமும் ஓஹோ ரகம். பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியரின் ராசிபலன்கள் துல்லியமாக இருந்தது.
- மீரா ரங்கராஜன், வந்தவாசி.

சமயம் வளர்த்த நாயன்மார்களின் சேக்கிழாரின் பெருமைகளை அறிந்தோம். ஓவியர் வெங்கியின் கை வண்ணத்தில் அநபாயசோழர் சேக்கிழாருக்கு சாமரம் வீசும் காட்சி தத்ரூபமாக இருந்தது.பிரசாதம் தொடர் மணக்கிறது. சுக்ரீவனைப்பற்றிய தகவல்கள் அருமை.
- கலாரகு, வேலூர்.