ஒளிமயமான துவக்கம்



* பிரம்ம முகூர்த்த சூட்சுமம் என்ற தலையங்க கட்டுரையில் பிரம்ம முகூர்த்த நேரத்தின் சிறப்புக்களை கூறி, பிரம்ம முகூர்த்த நேரத்தில் மந்திர ஜபம், தியானம், பூஜைகள் செய்வதன் பலன்களை பட்டியலிட்டு, பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் வழிபாடுகளினால் எதிர்காலம் பிரகாசமடையும் விதத்தை விளக்கியது ஆன்மிகவாதிகள் மட்டுமல்லாது அனைவரும் தெரிந்து பயனடைய வேண்டிய தகவலாகும். பிரம்ம முகூர்த்தத்தின் பயனை விளக்கிய ஆன்மிகப் பலன் இதழ் ‘வாசகர் நலன்  நாடும் இதழ்’ என்பதை விளக்குகிறது. நன்றி.
- K.சிவக்குமார், சீர்காழி. - எஸ்.எஸ்.வாசன், வந்தவாசி.

* அம்மே வந்ததென் முன் நிற்கவே கட்டுரை திருக்கடவூர் என்று பெயர் வந்த காரணத்தைத் தெரிய வழி வகுத்தது. பக்தனுக்குச் சிரஞ்சீவி அளித்ததையும், இறைவி அபிராமி, அமாவாசை நாளில், முழு நிலவை வெளிவரச் செய்த அற்புதத்தையும், கட்டுரை வாயிலாக அறிந்தோம். - இராம.கண்ணன், சாந்தி நகர், திருநெல்வேலி.

* சூரியன் பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம் சூரியனின் தரிசனம் தந்தது. பிரம்ம முகூர்த்தம் கட்டுரை சூட்சுமம் தந்தது புத்தாண்டன்று. ஆதவன் ஒளி பரப்பி ஆண்டவனை தொழும் காட்சிகள் கட்டுரைகள் ஒளி பரப்பியது. தெளிவு பெறுஓம் சர்மா அவர்களின் பதில்களை திரும்பத் திரும்ப படித்தோம். அனைத்து படைப்புகளும் தியானம் தரும் அமைதியைத் தந்தது. பிரகாசமாய் பிரமாண்டமாய் ஒளி பரப்பியது. ஆன்மிக வாழ்வுக்கு தமிழன்புடன் நன்றி. - வைரமுத்து பார்வதி, ராயபுரம்.

* ஆதவன் வழிபட்ட மங்கலக்குடி, (அதற்கான புராணக்கதை) ஆவினன்குடி திருக்கழுக்குன்றம், பரிதி நியமம், மங்கள நாயகி, வியாசர்பாடி ரவீஸ்வரர், துண்டியூர், வேதக்குடி, கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம் உட்பட்ட சிவாலயங்கள் குறித்த தகவல்கள்  சூரியன் பக்தி ஸ்பெஷலிற்கு பெருமை சேர்த்திருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

இன்பமும், துன்பமும் பரந்தாமனை உணர்வதில்தான் இருக்கிறது எனும் வரி - பொன்னெழுத்து. சுகத்திற்கும் ஆனந்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கட்டுரையாளர் வெகு
நேர்த்தியாக கூறி இருந்தார். - கே.அம்புஜவல்லி, புத்தூர்.

* அட்டையில் மிளிர்ந்த ஆதவனும், தீபாராதனையும் கண்ணுக்கு மட்டுமல்ல, ஆன்மிகத்தின் அழகையும் இதயத்தையே வருடியது; போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் என்ற செய்தி நல்ல தகவல்; தைத்திங்களில் தென் பண்ணை ஆற்றுத்திருவிழா தகவல்கள் மிகவும் பயனுடையதாக இருந்தது. - இலக்குமண சுவாமி, திருநகர், மதுரை.

* தமிழ்நாட்டிலேயே ஆதவள் வழிபட்ட எண்ணற்ற ஆலயங்கள் இருக்க அதில் குறிப்பிட்ட முக்கிய தெய்வீக ஆலயங்களை நாடிச்சென்று அதன் தனி சிறப்புக்களை எடுத்துச்சொல்லியிருந்தது சூரிய ஒளியைப்போல் பிரகாசமாக இருந்தது. வித்தியாசமான தலைப்பு. அதற்கு சிறந்த தெய்வீகமான விளக்கம். ‘திருமூலர் மந்திர ரகசியம்’ மனதை தொடுகிறது. சோளிங்கர் - பற்றிய அருமையான விளக்கம். அருமையான புகைப்படம். இரண்டும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. சூர்ய சதகம் - தினமும் சொன்னாலே வாழ்க்கை சதம் (நூறு) எட்டு என்பது திண்ணம். பாலகுமாரன் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் எழுதிவிட்டுச் சென்ற தை ‘மகாபாரதம்’ ‘நூறு)’ எட்டிப் பிடிக்கின்றது எனும்போது மலைப்பாக உள்ளது. - சுகந்தி நாராயணண்,  வியாசர்நகர்.